கேப்டன்ஷிப் பற்றி சிறப்பாக கூறிய ரோஹித் சர்மா.!
கேப்டன்ஷிப் பற்றி சிறப்பாக ரோஹித் சர்மா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா இந்தியாவின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார், அவர் அடித்த இரட்டை சதத்தின் சாதனையை பற்றி சொல்லியே தெரிய வேண்டாம், மேலும் அவர் அடிக்கும் சிக்ஸர்களை வைத்து அவரை ரசிகர்கள் ஹிட்மேன் என்று அழைக்கின்றனர்.
இந்த நிலையில் உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, இதனால் அணைத்து கிரிக்கெட் வீரர்களும் வீட்டிலே இருக்கின்றனர்.
மேலும் சமீபத்தில் ரோஹித் சர்மா அளித்த பேட்டியில் அவர் கேப்டன்ஷிப் பற்றி சில தகவலை கூறியுள்ளார், அதில் கேப்டன்ஷிப் முக்கியமான ஒன்று அணியில் உள்ள அணைத்து வீரர்களையும் பொறுமையாக வழிநடத்தவேண்டும், கேப்டனாக உணர்ச்சிகளை மறைப்பதுமிக முக்கியமான பகுதி என்று நான் நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் கேப்டனாக கோபத்தைக் காட்டுவது ஒரு சிறந்த முயற்சி அல்ல நாம் கோபம் அடையும் பொழுது நாம் நமது மனநிலையை சில நேரங்களில் இழக்கிறோம், ஆனால் கோபத்தை அணியில் உள்ள வீரர்களிடம் காட்டக்கூடாது அதுதான் மிகவும் முக்கியமான ஒன்று மேலும் உங்கள் உணர்ச்சிகளை மறைப்பது மிக முக்கியமான பகுதியாகும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் ஐபிஎல் போட்டி துவங்குவதற்கு முன் பயிற்சிக்கு போதுமான நேரம் இருப்பதாக நான் நம்புகிறேன் மேலும் இந்த வாரம் உடற்பயிற்சி நிலையம் திறக்கப்படும், எனது பயிற்சியை நான் தொடங்கவுள்ளேன் இப்போது, மேலும் மும்பையில் மழைக்காலம் காரணமாக, நாங்கள் வெளிப்புறத்தில் பயிற்சி பெற முடியாது என்றும் கூறியுள்ளார்.