நேற்று நடைபெற்ற எட்டாவது உலகக்கோப்பை போட்டியில் தென்னாபிரிக்கா, இந்தியா ஆகிய இரு அணிகள் மோதியது. போட்டியில் டாஸ் வென்ற தென்னா பிரிக்காஅணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 227 ரன்கள் எடுத்தனர்.பின்னர் களமிறங்கிய இந்திய அணி 47.3 ஓவர் முடிவில் 230 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கி அதிரடியாகவும் , நிதானமாவும் விளையாடிய ரோஹித் சர்மா அணியின் எண்ணிக்கையை உயர்த்தியது மட்டுமல்லாமல் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 122 ரன்கள் குவித்தார். இவரின் இந்த அதிரடி ஆட்டம் இந்திய அணி வெற்றிக்கு செல்ல உறுதுணையாக இருந்தது.
மேலும் உலகக்கோப்பையில் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிக ரன்கள் குவித்த பட்டியலில் ரோஹித் சர்மா இடம் பெற்றார்.அந்த பட்டியலில் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சினை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தில் உள்ளார்.முதல் இடத்தில் ஷிகார் தவான் 137 ரன்கள் அடித்து உள்ளார்.
137 – Shikhar Dhawan (Melbourne), 2015
122* – Rohit Shamra (Southampton), 2019
111 – Sachin Tendulkar (Nagpur), 2011
97 – Sourav Ganguly (Hove), 1999
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…