ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. இந்திய அணியில் மீண்டும் “ஹிட்மேன்”
காயம் காரணமாக இந்திய அணியின் ரோஹித் சர்மா இடம்பெறாத நிலையில், தற்பொழுது அவர் டெஸ்ட் தொடரில் விளையாடுவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ஐபிஎல் தொடர், நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில், இதனைதொடர்ந்து கோலி தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, டெஸ்ட், ஒருநாள், டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை பிசிசிஐ ஏற்கனவே வெளியிட்டுள்ளது.
இதில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக பங்கேற்ற இளம் வீரர்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளனர். ஆயினும், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மா அணியின் இடம்பெறாதது, ரசிகர்களிடையே பெருமளவில் ஏமாற்றத்தை அளித்தது. இந்தநிலையில் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியின் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மாவை தேர்வு செய்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
மேலும், காயம் காரணமாக வருண் சக்ரவர்த்தி விலகிய நிலையில், அவருக்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த யாக்கர் மன்னன் T.நடராஜன் அணியில் இடம்பெற்றார். அதுமட்டுமின்றி, விராட் கோலி, முதல் டெஸ்ட் போட்டிக்கு பின் இந்தியா திரும்பவுள்ளதாகவும் அவருக்கு பதிலாக ரோஹித் சர்மா விளையாடுவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.