ரோஹித் சர்மா ஐபிஎல்லில் இருந்து ஓய்வு எடுக்க வேண்டும் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ரோஹித் சர்மா
ஐபிஎல் 2023 தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த சீசனில் 7 போட்டிகளில் விளையாடிவுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் மொத்தமாக 181 ரன்களை அடித்துள்ளார். சராசரியாக 25.86 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 135 வைத்துள்ளார்.
ரோஹித் நன்றாகத் தொடங்கினார், ஆனால் இன்னும் பெரிய ஸ்கோராக பெறமுடியவில்லை. நான்கு முறை அவர் 20 முதல் 45 ரன்களுக்குள் ஆட்டமிழந்தார். அதைப்போல மும்பை அணியும் சிறப்பாக செயல்படவில்லை. இரண்டு தோல்விகளுடன் சீசனைத் தொடங்கியது, பிறகு மூன்று போட்டிகளில் தொடர்ந்து வெற்றிபெற்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது.
சுனில் கவாஸ்கர் ஆலோசனை
மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா ஐபிஎல் போட்டியில் இருந்து தற்காலிகமாக ஓய்வு எடுத்துக்கொண்டு புத்துணர்ச்சியுடன் திரும்ப வேண்டும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இது குறித்து பேசிய சுனில் கவாஸ்கர் ” உண்மையாக, ரோஹித் தற்போதைக்கு ஓய்வு எடுத்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தன்னைத் தகுதியுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் நான் கூறுவேன்.
ஐபிஎல் இருந்து ஓய்வு எடுக்க வேண்டும். வேண்டுமானால் கடைசி 3 அல்லது 4 போட்டிகளில் விளையாட வரட்டும். ஆனால் இப்போது அவருக்கு கொஞ்சம் ஓய்வு தேவை” என்று கூறியுள்ளார். இவர் பேசியதை பார்த்த ரோஹித் சர்மா ரசிகர்கள் சற்று அதிர்ச்சியில் உள்ளனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் மாதம் 7-11 வரை,லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் தகுதி பெற்றுள்ளன. நேற்று இறுதிப்போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…