CSK ஆறுச்சாமிக்காக வருத்தப்பட்ட ரோஹித் சர்மா.! இந்த விஷயம் சுத்தமா பிடிக்கல..!!

Rohit Sharma

ஐபிஎல் 2024 : மும்பை அணியின் முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரின் ‘இம்பாக்ட் பிளேயர்’ விதியை பற்றி பேசி இருக்கிறார்.

ஐபிஎல்லில் உள்ள இம்பாக்ட் பிளேயர் விதிப்படி, ஒரு போட்டிக்கு முன் 11 வீரர்களுடன் கூடுதலாக ஐந்து மாற்று வீரர்களின் பெயர்களை டாஸ் போடும் பொழுது அறிவிக்க வேண்டும். அதன் பிறகு விளையாடும் பொழுது ஏதாவது ஒரு வீரருக்கு பதிலாக மாற்று வீரராக அதாவது (இம்பாக்ட் ப்ளேயர் விதிப்படி) அணியில் இடம்பெற வைத்து விளையாடலாம்.

இந்த விதிப்படி சென்னை அணியின் ஆறுச்சாமி ஷுவம் துபே பேட்டிங் மட்டுமே களமிறங்கி சிக்ஸர்கள் அடித்து விட்டு தனது பேட்டிங் நிறைவு செய்ததும் இந்த இம்பாக்ட் வீரர் விதியின் படி வெளியில் உக்காருவார் அவருக்கு பதிலாக ஒரு பவுலர் அணியில் இடம்பெறுவார். ஆனால், சிவம் துபே ஒரு ஆல் ரவுண்டர் வீரர் ஆவர். இந்த இம்பாக்ட் வீரர் விதிப்படி அவரது பந்து வீச்சு பாதிக்கப்படுகிறது என கூறலாம்.

இதை சுட்டி காட்டி மும்பை அணியின் முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மா இந்த இம்பாக்ட் ப்ளேயர் விதியை பற்றி ‘கிளப் ப்ரேரி ஃபயர்’ (Club Prairie Fire) என்ற போட்காஸ்டில் பேசி இருந்தார். அவர் கூறுகையில், “இந்த இம்பாக்ட் ப்ளேயர் (Impact Player) விதியை ரசிக்க மாட்டேன், அதற்கு நான் ஒரு ரசிகனும் இல்லை, இது எனக்கு பிடிக்கவும் இல்லை மேலும், இந்த விதியால் பல ஆல் ரவுண்டர் வீரர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என கூறலாம்.

முக்கியமாக சென்னை அணியின் சிவம் துபே மற்றும் ஹைதரபாத் அணியின் வாஷிங்டன் சுந்தர் இருவரும் மிக சிறந்த ஆல் ரவுண்டர் வீரர்கள் ஆவார்கள். ஆனால், இந்த இம்பாக்ட் ப்ளேயர் விதியின் படி இருவருக்கும் பந்து வீச வாய்ப்பு கிடைத்ததில்லை. நீங்கள் இந்த இம்பாக்ட் ப்ளேயர் விதியை ஒரு பொழுது போக்கிற்காக பார்த்தால் அது ஓகே தான். ஆனால் இதுவே ஒரு சர்வேதச போட்டிகளில் ஆல் ரவுண்டர் வீரருக்கு இது நல்லதாக அமையாது”, என ரோஹித் சர்மா அந்த பேட்டியில் பேசி இருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்