சாதனை கனவாக போனது… வெறும் 1 ரன்னில் அவுட்! வந்த வேகத்தில் திரும்பிய ரோஹித் ஷர்மா.!
குஜராத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் 3வது ஒருநாள் போட்டியில், வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பிய இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா.

குஜராத் : இந்தியா – இங்கிலாந்து இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி, இன்று அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக மாறியுள்ளது.
அதாவது, மார்க் வுட் வீசிய 2வது ஓவரின் முதல் பந்திலேயே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நம்பிக்கை நட்சத்திரம் ரோஹித் ஷர்மா வெறும் 1 ரன்னுக்கு அவுட் ஆகி நடையை கட்டினார். இப்போட்டியில் 13 ரன்கள் எடுத்து ஒருநாள் போட்டியில் 11,000 ரன்களை கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது விக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
கடந்த சில போட்டிகளில் ரோகித், கோலி பேட்டிங் மோசமாக இருப்பதாக விமர்சனம் எழுந்தது. அதற்கு கடைசி போட்டியில் ரோகித் பதிலடி கொடுத்த நிலையில், இன்றைய போட்டியில் கோலி பதிலடி கொடுப்பாரா என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, 2வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா அதிரடி சதம் அடித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இப்போட்டியில், ரோகித் 13 ரன்கள் எடுத்தால் ஒருநாள் போட்டியில் 11,000 ரன்களை கடந்து விடுவார் என ரசிகர்கள் கனவில் மண்ணை வாரி போட்ட மாதிரி அவரது சாதனையும் கணவவாக போனது. இப்பொது மீதமிருக்கும் கோலி 89 ரன்கள் எடுத்தால் 14,000 ரன்களையும் கடப்பாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
சச்சினின் உலக சாதனையை முறியடிக்க தவறவிட்ட ரோஹித்
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரோஹித் 13 ரன்கள் எடுத்திருந்தால், ஒருநாள் போட்டிகளில் 11,000 ரன்களை எட்டியிருப்பார். இதனை செய்திருந்தால், சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை முறியடித்திருப்பார். சச்சின் தனது 284வது ஒருநாள் போட்டியில் 11,000 ரன்களை எட்டியிருந்தார், மேலும் ரோஹித் தனது 268வது ஒருநாள் போட்டியிலேயே இந்த சாதனையை எட்டிருப்பார்.