தல தோனியின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா..!

இந்திய அணியன் மிகச்சிறந்த கேப்டனாக செயல் பட்டவர் எம்.எஸ்.தோனி ஆவார். இவர் இந்திய அணிக்காக அனைத்து வித ஐசிசி கோப்பைகளையும் தட்டி தூக்கிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்திய அணிக்காக அறிமுகமானது முதல், அணியின் கேப்டனாக செயல்பட்டு தனது சர்வேதச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெரும் வரை 298 இந்திய வெற்றிக்கு பங்காற்றி உள்ளார்.

” டிஆர்எஸ் விதியில் மாற்றம் கொண்டு வர வேண்டும் ” – பென் ஸ்டோக்ஸ் கோரிக்கை ..!

கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாட்டு வீரர்களில், இந்த பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி 313 இந்திய வெற்றிக்கு பங்காற்றி 3-வது இடத்தில் உள்ளார். முன்னாள் வீரரான எம்எஸ் தோனி 298 இந்திய வெற்றிக்கு பங்காற்றி இந்த  பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளார். தற்போது ரோஹித் சர்மா 297 வெற்றிகளுடன் தோனியின் தொட்டடுத்து இருக்கிறார்.

மேலும், இரண்டு சர்வேதச வெற்றிகளை இந்திய அணி பெற்றால், வெற்றி பெற்ற இந்திய அணியில் ரோஹித் ஷர்மா இடம் பெற்றால் தல தோனியின் இந்த சாதனையை முறியடிப்பார். அதே போல் இந்த பட்டியலில் முதல் இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான ரிக்கி பாண்டிங் 377 சர்வேதச ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு பங்காற்றி முதலிடத்தில் உள்ளார்.

நடைபெற்று வரும் இந்தியா, இங்கிலாந்து 5 போட்டி கொண்ட டெஸ்ட் போட்டிகளில்  இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இருக்கிறது. மீதம் உள்ள இரண்டு டெஸ்ட் போட்டியில், ரோஹித் இந்திய அணியில் இடம் பெற்று இந்திய அணி ஒரு வேளை அந்த இரண்டு  போட்டியிலும் வெற்றி பெற்றால் தோனியின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 தங்கள் அணிக்காக அதிக வெற்றிகளில் பங்காற்றியவர்கள் : 

  • 377 – ரிக்கி பாண்டிங்               – ஆஸ்திரேலியா
  • 336 – மஹேல ஜயவர்தன        – இலங்கை
  • 313 – விராட் கோலி                      – இந்தியா
  • 307 – சச்சின் டெண்டுல்கர்     – இந்தியா
  • 305 – ஜாக் காலிஸ்                        – தென் ஆப்ரிக்கா
  • 305 – குமார் சங்கக்கார            – இலங்கை
  • 298 – எம்எஸ் தோனி                    – இந்தியா
  • 297 – ரோஹித் சர்மா                   – இந்தியா

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்