நடப்பு உலகக்கோப்பையில் முதலிடத்தில் இருக்கும் ரோஹித் சர்மா!
நேற்று முன்தினம் நடந்த போட்டியில் பங்களாதேஷ் அணி உடன் இந்திய அணி மோதியது. இப்போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 314 ரன்கள் குவித்தது.
பின்னர் இறங்கிய பங்களாதேஷ் அணி 48 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது 286 ரன்கள் எடுத்து 28 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி தோல்வியடைந்தது.
இப்போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரராக ரோஹித் சர்மா களமிறங்கி ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா 92 பந்தில் 104 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில் உலகக்கோப்பையில் 500 ரன்னிற்கு மேல் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றார்.முதலிடத்தில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் உள்ளார். உலகக்கோப்பையில் சச்சின் இரண்டு முறை 500 ரன்னிற்கு மேல் அடித்து உள்ளார்.
மேலும் நடப்பு உலகக்கோப்பையில் ரோஹித் சர்மா 544 எடுத்து அதிக ரன்கள் அடித்த வீரர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
சச்சின் – 673 (2003)
ரோஹித் – 544 (2019) *
சச்சின் – 523 (1996)