சதம் அடித்த பட்டியலில் மத்தேயு ஹேடனுக்கு அடுத்த இடத்தில் ரோஹித் சர்மா!

நேற்று முன்தினம் நடந்த போட்டியில் இங்கிலாந்து அணி உடன் இந்திய அணி மோதியது. பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் களமிறங்கி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 337 ரன்கள்சேர்த்தனர்.
பின்னர் இறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 306 ரன்கள் எடுத்து 31 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது.
இப்போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரரான ரோஹித் சர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 109 பந்தில் 102 ரன்கள் குவித்தார். இதன் மூலம் நடப்பு உலகக்கோப்பையில் ரோஹித் சர்மா அடித்த மூன்றாவது சதமாகும். இதற்கு முன் நடந்த பாகிஸ்தான் , தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான லீக் போட்டிகளில் சதம் அடித்து இருந்தார்.
இந்நிலையில் உலகக்கோப்பையில் தொடக்க வீரர்களாக களமிறங்கி மூன்று சதம் அடித்த வீரர்களில் ரோஹித் சர்மா மூன்றாம் இடத்தை பிடித்து உள்ளார்.இதற்கு முன் மத்தேயு ஹேடன் 2007 -ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பையில் தொடக்க வீரராக களமிறங்கி மூன்று சதம் அடித்து இருந்தார்.
அதன் பின்னர் தற்போது நடப்பு உலகக்கோப்பையில் ரோஹித் சர்மா மூன்று சதம் அடித்து உள்ளார்.
மார்க் வா (1996)
மத்தேயு ஹேடன் (2007)
ரோஹித் சர்மா (2019) *
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,
February 25, 2025
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025