இவர் சாதனையை முறியடிக்க போகும் ரோஹித் சர்மா! அப்படி என்னனு தெரியுமா?
இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா வரும் வங்கதேச டெஸ்ட் தொடர் மூலம் ஒரு சாதனையை முறியடிக்கவுள்ளார்.
சென்னை : வரும் செப்டம்பர்-19 ம் தேதி முதல் வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளனர். இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நடைபெற போகும் 2 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரை விளையாடவுள்ளது.
இந்த தொடரையும், இதற்கு பிறகு நடைபெறும் நியூஸிலாந்து அணியுடனான 3 டெஸ்ட் போட்டியையும் வெற்றி பெற்றால் ரோஹித் சர்மா ஒரு கேப்டனாக, இந்திய அணியின் முன்னாள் கேப்டனான முகமது அசாருதீன் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அசாருதீன் இந்திய அணியின் கேப்டனனாக செயல்பட்டு மொத்தம் 47 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதில் 14 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். அதே போல் ரோஹித் சர்மா இதுவரை 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதில் 10 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வெற்றி பெற செய்துள்ளார்.
இதனால், வங்கதேச அணியுடனான 2 போட்டி மற்றும் நியூஸிலாந்து அணியுடனான 3 டெஸ்ட் போட்டி என மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகளையும் வெற்றி பெற்றால் 15 டெஸ்ட் போட்டிகளை வெற்றி பெற்று முன்னாள் கேப்டன் அசாருதீன் சாதனையை முறியடிப்பார்.
இந்திய அணியில் இதுவரை விராட் கோலி தலைமையில் இந்திய அணி 68 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் 40 வெற்றிகளை இந்திய அணி பெற்றுள்ளது.
இதனால், இந்தியாவின் சிறந்த டெஸ்ட் கேப்டன் தரவரிசையில் விராட் கோலி முதலிடத்தில் இருந்து வருகிறார். அவரை தொடர்ந்து எம்.எஸ்.தோனி 60 போட்டிக்கு தலைமை தாங்கி 27 வெற்றியுடன் 2-வது இடத்தில் இருக்கிறார்.
அவருக்கு பின் கங்குலி 21 போட்டிகள் வெற்றி பெற்று 3-வது இடமும், அசாருதீன் 14 வெற்றிகளை பெற்று 4-வது இடத்திலும் இருக்கின்றனர். ரோஹித் சர்மா தொடர்ந்து இந்த 5 டெஸ்ட் போட்டிகளையும் வெற்றி பெற்றால் இந்த பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.