ரோகித் சர்மா அபார  அரைசதம்-தோனி நிதான ஆட்டம்

Default Image

முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய  அணி வீரர்  ரோகித்  அரைசதம் அடித்துள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று (ஜனவரி 12-ம் தேதி) தொடங்கியது.

இன்று தொடங்கிய முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.இதன் பின்னர் பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் அடித்தது.ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக பீட்டர் 73,கவாஜா 59,மார்ஷ் 54 ரன்கள் அடித்தனர்.களத்தில் மேக்ஸ்வெல் 11* ,மார்கஸ் 47* ரன்களுடன் இருந்தனர்.

இந்தியா அணியின் பந்துவீச்சில் குல்தீப்,புவனேஸ்வர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

இதன் பின் இந்திய அணி தனது பேட்டிங்கை தொடங்கியது.ஆரம்பமே இந்திய அணிக்கு அதிர்ச்சியாக அமைந்தது.இந்திய அணி 28 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 112  ரன்கள் அடித்துள்ளது.ரோகித் சர்மா அரைசதம் அடித்துள்ளார்.இது இவருக்கு 38-வது அரைசதம் ஆகும்.

களத்தில் தோனி 41*,ரோகித் 58* ரன்களுடன் உள்ளனர்.கோலி மற்றும் ராயுடு டக் அவுட் ஆகி வெளியேறினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்