அப்போ கேப்டனா இருந்தேன் ஆனா இப்போ? மௌனம் கலைத்த ரோஹித் சர்மா!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் கோப்பையை வாங்கிக்கொடுப்பது தான் என்னுடைய குறிக்கோள் என ரோஹித் சர்மா பேசியுள்ளார்.

rohit sharma about mi

மும்பை : ஐபிஎல் போட்டிகளில் அதிக கோப்பைகளை வென்ற அணிகள் என்றால் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை அணிகளை சொல்லலாம். இதில் மும்பை அணிக்காக கேப்டனாக விளையாடி ரோஹித் ஷர்மா தான் 5 முறையும் அணிக்கு கோப்பையை வாங்கி கொடுத்தார். கேப்டனாக இருந்த அவரை மும்பை அணி மற்ற அணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் அளவுக்கு இருந்த சூழலில் இப்போது அவர் கேப்டனாக இல்லாமல் வீரராக விளையாடுவதும் அணியின் செயல்பாடும் சரியாக இல்லை என்கிற விமர்சனங்களும் எழுந்திருக்கிறது.

கடந்த ஆண்டு ஹர்திக் பாண்டியாயவை மும்பை அணி ஏலத்தில் எடுத்து அவர் தான் இனிமேல் மும்பை அணியை வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டதில் இருந்து மும்பை அணியில் என்ன தான் நடக்கிறது என்கிற அளவுக்கு கேள்விகளும் எழுந்தது. ஏனென்றால், கடந்த சீசனில் தொடர் தோல்வி, வீரர்கள் பார்ம் என எதுவும் சரியில்லை. கடந்த ஆண்டு வெறும் 4 போட்டியில் மட்டுமே வெற்றிபெற்று புள்ளிவிவரப்பட்டியலில் 10-வது இடத்தில இருந்தது.  இது அனைத்திற்கும் கேப்டன் மாற்றம் தான் காரணம் என கூறி ஹர்திக் பாண்டியாவையும் விமர்சிக்க தொடங்கிவிட்டார்கள்.

கடந்த சீசனை போலவே இந்த சீசனிலும் மும்பை அணி 3 போட்டிகள் விளையாடி 1 போட்டியில் வெற்றிபெற்று சுமாரான பார்மில் தான் இருக்கிறது. இந்த சூழலில், இதுவரை கேப்டன் மாற்றம் குறித்து பேசாமல் இருந்த ரோஹித் சர்மா சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மௌனம் கலைத்து பேசியிருக்கிறார்.

இது குறித்து அவர் பேசுகையில், ” நான் ஐபிஎல் போட்டிகள் விளையாட வந்த ஆரம்பத்தில் இருந்த நிலைமையையும், இப்போது இருக்கும் நிலைமையையும் பார்த்தேன் என்றால் வெளிப்படையாகவே மாறிவிட்டது. இந்த நேரத்தில் நான் ஒன்னு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நான் முன்னதாக கேப்டனாக மும்பை அணிக்கு இருந்தேன் இப்போது இல்லை அதனால் எனக்கு எண்ணம் வேறு மாதிரி இருக்கிறது என்று சொன்னால் அதனை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.

ஏனென்றால் நான் கேப்டனாக இல்லை என்றாலும் என்னுடைய மனதில் மும்பை அணிக்காக கோப்பையை வாங்கிக்கொடுக்கவேண்டும் என்று ஆசை இருக்கிறது. அணிக்காக நான் செய்ய விரும்புவதும் அது தான். மைதானத்துக்கு சென்று போட்டிகளை வெல்வது, கோப்பைகளை வெல்வது தான் என்னுடைய முதல் எண்ணங்கள். மும்பை இந்தியன்ஸ் என்றாலே கோப்பைகளை வெல்ல கூடிய அணி என்று தான் அறியப்பட்டது.  அந்த அளவுக்கு நம்ப முடியாத சூழ்நிலையில் கூட நாங்கள் சில போட்டிகளில் கோப்பைகளை வென்று இருக்கிறோம்” எனவும் தெரிவித்தார்.

மேலும், தொடர்ந்து அவர் பேசுகையில்  அணியில் இந்த முறை சேர்ந்த அனுபவம் வாய்ந்த வீரர்கள் குறித்து சில விஷயங்களை பேசினார். இது குறித்து பேசிய அவர் ” எங்களுடைய அணியில் ட்ரெண்ட் போல்ட் போன்ற வீரர்கள் திரும்பி இருப்பது கூடுதல் பலம். அவர் ஏற்கனவே மும்பை அணிக்காக விளையாடி இருக்கிறார். எனவே, அவருக்கு மும்பை அணியின் சூழல் எப்படி இருக்கும் என்பது நன்றாகவே தெரியும். அவரைப்போலவே, மிட்செல் சாண்ட்னர் இருக்கிறார்.

மிட்செல் சாண்ட்னர் பொறுத்தவரை அவருக்கு கேப்டன்சி அனுபவம் என்பது அதிகமாக இருக்கும். அவர் நியூசிலாந்து அணியை வழிநடத்தியதை வைத்து பார்க்கும்போதே அவருக்கு இருக்கும் அனுபவம் நிச்சியமாக மும்பை அணிக்கும் உதவும் என நினைக்கிறேன். அதைப்போல அணியில் வில் ஜாக்ஸ், ரீஸ் டாப்லி போன்றவர்கள் பல்வேறு திறன்களை கொண்டு இருக்கிறார்கள். இவர்களுடன் சேர்ந்து சிறப்பாக விளையாடினாள் அசைக்க முடியாத அணியாக இருக்கலாம். எனவே என்னுடைய எண்ணம் முழுவதும் கோப்பையை வெல்வதில் தான் இருக்கிறது” எனவும் ரோஹித் சர்மா பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்