rohit sharma [file image]
சென்னை : ரோஹித் சர்மா தான் எதிர்கொண்டதில் கடினமான பந்துவீச்சாளர் யார் என்பது பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் மாதம் முதல் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. இதற்கிடையில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா துபாய் 103.8வானொலி நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது தான் எதிர்கொண்டதில் ரொம்பவே கடினமாக இருந்த பந்துவீச்சாளர் பற்றி பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய ரோஹித் சர்மா ” நான் பொதுவாகவே பேட்டிங் செய்ய செல்வதற்கு முன்பு டேல் ஸ்டெய்ன் எதிராக விளையாட போகிற போட்டிக்கு முன்னதாக 100 முறை அவருடைய பழைய வீடியோக்களை பார்த்துவிட்டு தான் விளையாடுவேன். அப்படி பார்த்துவிட்டு சென்றாலும் கூட நான் அவருடைய பந்தில் எப்படியோ ஆட்டமிழந்துவிடுவேன். அந்த அளவிற்கு அவருடைய பந்துவீச்சு சிறப்பாக இருக்கும்.
என்னை பொறுத்தவரை அவர் ரொம்பவே பெரிய ஜாம்பவான். அவருடன் நான் பலமுறை விளையாடி இருக்கிறேன். அவர் வீசும் பந்துகள் எல்லாம் ரொம்பவே வேகமாக இருக்கும். அவர் எதிர்கொள்வது எனக்கு அந்த அளவு சுலபமான விஷயம் இல்லை என்று நினைக்கிறன். ஒரு போட்டியில் விளையாடுகிறார் என்றால் அந்த போட்டியில் கண்டிப்பாக வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற மனநிலையுடன் அவர் விளையாடுவார். அவருக்கு எதிராக விளையாடியது மகிழ்ச்சியாக இருக்கிறது” எனவும் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.
மேலும், தென்னாபிரிக்கா அணிக்காக விளையாடிய வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன் 2004 ஆம் ஆண்டு தனது முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடினார். அதனை தொடர்ந்து, 2021 -ஆம் ஆண்டு அனைத்து வடிவமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஸ்டெயின் 439 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
லண்டன் : 1000 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து இசைஞானியாக நம்மில் உயர்ந்து நிற்கும் இளையராஜா தற்போது தனது நீண்ட வருட…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் கலந்துகொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. நாளை…
குஜராத் : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது…
துபாய் : துபாயில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும்…
சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக…
சென்னை : பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தவெக சார்பில் தமிழ்நாடு…