பிறந்தாளுக்கும் .. கிரிக்கெட்டுக்கும் ராசி இல்லா ரோஹித் சர்மா ..! கவலையில் ரசிகர்கள் !

Rohit Sharma : பிறந்தநாளக்கும் ரோஹித் ஷர்மாவுக்கும் ராசி இல்லை என அவரது ரசிகர்கள் கவலையில் இருந்து வருகின்றனர்.
இந்திய அணியின் கேப்டனும், மும்பை அணியின் முன்னாள் கேப்டனுமான ரோஹித் ஷர்மாவின் பிறந்தநாளான நேற்று அவரது ரசிகர்களால் இணையத்தில் கொண்டாடப்பட்டது. நேற்றைய தினத்தில் ஐபிஎல் தொடரின் 48-வது போட்டியாக மும்பை அணியும், லக்னோ அணியும் மோதியது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடுவார் என்று அவரது ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கபட்டது.
ஆனால், நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரரான ரோஹித் சர்மா வெறும் 4 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். இதனால் ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரோஹித் ஷர்மாவின் விளையாட்டு முடிவுக்கு வந்தது. மேலும், இந்த ஐபில் தொடர் மட்டுமல்லாது இதற்கு முன்னும் அவரது பிறந்தநாள் அன்று அவர் விளையாடிய ஐபில் போட்டியிலும் அவர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார்.
ரோஹித் சர்மா இதற்கு முன் 2014-ம் ஆண்டு நடைபெற்ற ஐபில் தொடரில் ஏப்ரல்-30 ம் தேதி மும்பை அணி, ஹைதராபாத் அணியை எதிர்கொண்டு விளையாடியது. அந்த போட்டியில் ரோஹித் சர்மா வெறும் 5 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்துள்ளார். மேலும், அதை தொடர்ந்து 8 வருடங்கள் கழித்து 2022-ம் ஆண்டில் இதே நாள் (ஏப்ரல்-30) ராஜஸ்தான் அணியுடன் விளையாடிய போட்டியிலும் 5 பந்துக்கு வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு கடந்த வருடம் 2023-ம் ஆண்டு மீண்டும் ராஜஸ்தான் அணிக்கு எதிராக அவரது பிறந்தநாள் அன்று அவர் விளையாடிய போட்டியில் 5 பந்துக்கு 3 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டாகி இருந்தார். இறுதியாக, நேற்றைய தினத்தில் இவர் வெறும் 5 பந்துக்கு 4 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் இவரது ரசிகர்கள் பிறந்தலுக்கும் இவருக்கும் ராசியே இல்லை என்றும், இது ஒரு தொடர் கதையாகவே தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்றும் அவரது ரசிகர்களால் சமூகவலைத்தளத்தில் பரப்பபட்டு வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
தமிழகத்தில் எங்கெல்லாம் எப்போது மழைக்கு வாய்ப்பு? வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்…
February 24, 2025
NZvsBAN : டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச முடிவு!
February 24, 2025
ஈஷா யோகாவின் சிவராத்திரி விழாவுக்கு தடையில்லை! உயர்நீதிமன்றம் உத்தரவு!
February 24, 2025