virat kohli Rajat Patidar rohit sharma [File Image]
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை (ஜனவரி 25) -ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் ஐதராபாத்தில் நடக்கிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இருந்து விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளார்.
இதனையடுத்து, விராட் கோலி விலகி இருக்கும் நிலையில், அந்த இடத்தில் எந்த வீரர் களமிறங்குவார் என்ற கேள்வி எழும்பியது. பிறகு, விராட் கோலிக்கு பதில் ரஜத் படிதார் இடம்பெற்றுள்ளார் என தகவல் வெளியாகி இருந்தது.
இந்தியா vs இங்கிலாந்து : பிட்ச் முதல் ஸ்ட்ரீமிங் வரை முழு விவரம் இதோ!
இந்நிலையில், விராட் கோலிக்கு பதிலாக அணியில் ரஜத் படிதார் சேர்க்கப்பட்ட காரணத்தை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி இல்லாததை நிரப்ப ஒரு அனுபவமிக்க வீரர் இருந்தால் நன்றாக் இருக்கும். அந்த மாதிரி ஒரு வீரரை தேர்வு செய்யலாம் என்று நினைத்தோம்.
ஆனால் இளைஞர்கள் இது போன்ற போட்டிகளில் விளையாடினாள் நன்றாக இருக்கும் என்பதால் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்று திட்டமிட்டோம். எனவே, விராட் கோலிக்கு பதிலாக ரஜத் படிதார் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்” என கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” கண்டிப்பாக இந்த டெஸ்ட் தொடரில் நாங்கள் சிறப்பாக விளையாடுவோம் என்று நம்புகிறோம் எனவும் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர்…
அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தொடரின் 64-வது போட்டி நேற்று நரேந்திர மோடி…
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 2-3 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…
சென்னை : தமிழ்நாட்டில் 2025-2026 கல்வியாண்டிற்காக அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று…
ராஜஸ்தான் : நேற்று தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம்…
கோவை : மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல்…