யாரும் செய்யாத சாதனையை படைத்த கேப்டன் ரோஹித் சர்மா! தோனி இருந்தா கதையே வேற பாஸ்…
கிரிக்கெட் வரலாற்றில் அனைத்து வகை ஐசிசி தொடர்களிலும் இறுதிப் போட்டிக்கு அணியை அழைத்துச் சென்ற முதல் கேப்டன் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார்.

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி நேற்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி அதிரடியாக விளையாடி வெற்றி பெற்று 14-ஆண்டுகாள பழியை தீர்த்தது மட்டுமின்றி இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளாது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், கேப்டனாகவும் அவர் பெரிய சாதனையை படைத்திருக்கிறார்.
அது என்ன சாதனை என்றால், சர்வதேச கிரிக்கெட்டில் உள்ள முக்கியமான நான்கு ICC இறுதிப் போட்டிகளுக்கும் இந்திய அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்ற முதல் கேப்டன் என்ற சாதனையை தான்.
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதி – 2023
- ஒருநாள் உலகக் கோப்பை (CWC) இறுதி – 2023
- T20 உலகக் கோப்பை (T20I WC) இறுதி – 2024
- சாம்பியன்ஸ் டிராபி (CT) இறுதி – 2025
கிரிக்கெட் வரலாற்றில் எந்தவொரு கேப்டனும் இதற்கு முன்பு செய்யாத சாதனையை ரோஹித் சர்மா செய்துள்ளார். ICC தொடரில் வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தாலும், ஒரு கேப்டனாக இத்தனை முக்கிய இறுதிப் போட்டிகளில் அணியை கொண்டு சென்றது பெரிய விஷயம் என அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
தோனி ?
ரோஹித் ஷர்மாவுக்கு முன்னதாக ஆரம்ப காலத்தில் இந்தியாவை வழிநடத்தி சிறந்த கேப்டனாக இருக்கும் தோனி இந்த சாதனையை படைக்கவில்லையா என்று கேட்டால் இல்லை என்று சொல்லலாம். அதற்கு காரணமும் இருக்கிறது. அந்த காரணம் பற்றியும் பார்ப்போம்.
தோனி 2014-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரின் போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்ற பிறகு தான், அதாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) என்பது ICC 2019-ல் அறிமுகப்படுத்தபட்டது. எனவே, தோனி ஏற்கனவே 2014-ல் ஓய்வெடுத்ததால், இந்த தொடரில் அவர் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது. ஒரு வேளை அவர் இருக்கும் போது இந்த தொடர் கொண்டு வரப்பட்டு இருந்தது என்றால் அந்த கோப்பையை கூட அவர் வாங்கியிருக்கலாம் என்று தான் அவருடைய சாதனைகள் சொல்கிறது.
ஏனென்றால், தோனி ஒரே நேரத்தில் ODI, T20, Champions Trophy ஆகிய மூன்று ICC கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமை பெற்றுள்ளார். அதைப்போல, அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடவில்லை ரோஹித் விளையாடி அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்ற காரணத்தால் எந்தவொரு கேப்டனும் இதற்கு முன்பு செய்யாத சாதனையை அவர் படைத்துள்ளார். ரோஹித் சர்மா அனைத்து கோப்பைகளை வாங்கவில்லையென்றாலும் சாதனை படைத்திருக்கிறார். தோனி விளையாடிய மூன்று ஐசிசி முக்கிய போட்டிகளில் கோப்பை வாங்கி கொடுத்து சாதனையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.
தோனி வென்ற கோப்பைகள்
- 2007 T20 உலகக் கோப்பை – (இந்தியாவின் முதல் T20 உலகக் கோப்பை)
- 2011 ஒருநாள் உலகக் கோப்பை – (28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா உலகக் கோப்பை வென்றது)
- 2013 சாம்பியன்ஸ் டிராபி – (இந்தியாவின் இரண்டாவது சாம்பியன்ஸ் டிராபி வெற்றி)
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் முதல்.., அமெரிக்கா – உக்ரைன் அரசியல் நிலவரம் வரை…
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025
SA vs NZ : தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட வில்லியம்சன் – ரச்சின்! நியூசிலாந்து வைத்த இமாலய இலக்கு.!
March 5, 2025