மும்பை இந்தியன்ஸ் டீமில் ரோஹித் சர்மா இல்லையா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இன்று கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா இம்பேக்ட் பிளேயர் லிஸ்டில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். ரகானே தலைமையிலான கொல்கத்தா அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது.
டாஸ் வென்ற பிறகு இரு அணிகளும் தங்கள் அணியின் 11 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டனர். அதில் தான் ரோஹித் சர்மா ரசிகர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மும்பை அணியின் முன்னாள் கேப்டனும், மும்பை அணியின் நட்சத்திர வீரருமான ரோஹித் சர்மா பெயர் பிளேயிங் 11 டீமில் இடம்பெறவில்லை.
பாண்டியா தலைமையிலான அணியில் ரியான் ரிக்கல்டன், வில் ஜாக்ஸ்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, நமன் திர், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், ட்ரெண்ட் போல்ட், அஸ்வனி குமார் (அறிமுகம்), விக்னேஷ் புதூர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ராபின் மின்ஸ், கார்பின் போஷ், ராஜ் பாவா, சத்யநாராயண ராஜு உடன் ரோஹித் சர்மா இம்பேக்ட் பிளேயர் லிஸ்டில் இடம்பெற்றுள்ளார். மும்பை தற்போது பீல்டிங் தேர்வு செய்துள்ளதால், பந்துவீச்சாளர் ஒருவரை அதிகமாக பிளெயிங் 11ல் எடுத்து 2வது இன்னிங்ஸில் இம்பேக்ட் பிளேயராக ரோஹித் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.