மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது அதன் படி, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தனர். 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 19. 1 ஓவர்களில் 138 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசியத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்களை வீழ்த்திய அமித் மிஸ்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி புள்ளி விவரப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு சென்றது. இந்த நிலையில், இந்த போட்டியில் ஐபி எல்லின் திருத்தப்பட்ட விதிகளின்படி குறிப்பிட்ட கால அளவில் ஓவர்களை வீசி முடிக்காததால் ஐபிஎல் விதிகளை மீறியதாக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…
ஹைதராபாத்: இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி தங்கம் வென்று கொடுத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் வெங்கட தத்தா சாய்…
டெல்லி: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. கேரள ஆளுநராக இருந்த ஆரிப் முகம்மது கான், பீகாருக்கு…
கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…
டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…
சென்னை : இன்றயை காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. இதில் பொழுதுபோக்குக்காகவும், சில முக்கிய…