IND vs AFG: தோனியின் பெரிய சாதனையை சமன் செய்த ரோஹித் சர்மா..!
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி நேற்று இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 26 பந்துகள் மீதமிருக்க 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்த போட்டியில் இந்தியாவுக்காக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷிவம் துபே அரைசதம் அடித்து அணியை வெற்றி பெற செய்தனர். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ரோஹித் ஷர்மா தோனியின் மிகப்பெரிய சாதனையை சமன் செய்து முக்கிய சாதனைகளை தனது பெயரில் பதிவு செய்துள்ளார்.
ரோஹித் இதுவரை 53 டி20 போட்டிகளில் கேப்டனாக விளையாடி 41-ல் வெற்றியும், 12-ல் தோல்வியும் அடைந்துள்ளார்.
தோனியின் சாதனை:
இதற்கு முன், எம்எஸ் தோனி இந்திய கேப்டனாக மொத்தம் 72 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 41-ல் வெற்றி பெற்றுள்ளார். 28-ல் தோல்வியை சந்தித்துள்ளார். இது தவிர மூன்றாவது இடத்தில் உள்ள விராட் கோலி 50 போட்டிகளில் விளையாடி 30-ல் வெற்றியும், 16-ல் தோல்வியும் அடைந்துள்ளார்.