ரோஹித் கூறும் கருத்துக்கள் நான் திறமையாக பேட்டிங் செய்ய காரணம் – சூரியகுமார் யாதவ்…!
ரோஹித் சர்மா கூறும் கருத்துக்கள் நான் திறமையாக பேட்டிங் செய்ய காரணம் என்று சூரியகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கிரிக்கெட் வீரர் சூரியகுமார் யாதவ் நடப்பாண்டு தொடரில் 6 போட்டிகள் விளையாடி 180 அடித்துள்ளார். மேலும் கடந்த செவ்வாய்க்கிழமை ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் மிகவும் அதிரடியாக விளையாடி 47 பந்துகளில் 79 ரன்கள் அடித்தார். அவர் அடித்த ரன்களே
இந்த நிலையில் இதுகுறித்து சூரியகுமார் யாதவ் கூறுகையில், இப்போது இல்லை என்றால் எப்போதும் சோப்ரா ஆர்ச்சர் பந்தை அடிக்க முடியாது என்று நினைத்தேன் ஆனால் அப்போதிருந்த மனநிலையில் அவரது பந்தை அடிக்க நினைத்து தான் அடித்தேன்.
கேப்டன் ரோகித் சர்மா ஆலோசனைகள் எனது பேட்டிங் திறமைக்கு காரணம் ஆர்ச்சர் வீசிய பவுன்சர் பந்து என்னை தாக்கியது, எனது மூளையை மாற்றியது போல் உணர்ந்தேன். எதிர்முனையில் இருந்த ஹார்திக் பாண்டியவிடம் சென்று ஆர்ச்சர் அடுத்த பந்தை எப்படி வீசுவார் என கேட்டேன்.
அடுத்த பந்து யார்க்கர் வீச வாய்ப்புள்ளது என்று அவர் கூறினார். லாக்டோன் காலகட்டத்தில் நான் யர்க்கர் பந்தை எப்படி ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் விளையாடுவது என்று யோசித்து வைத்திருந்தேன் அதைப்போல் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடினேன்.
ரோஹித் சர்மா கூறும் அனைத்து கருத்துக்களும் என் மனதில் பதிந்து உள்ளது. அவர் கூறும் அணைத்து கருத்துக்களும் மிகவும் அற்புதமானவை, ரோஹித் சர்மாவிடமிருந்து பலவற்றை நான் கற்றுக் கொண்டுள்ளேன் மிகவும் சிறந்த அணிக்கு தேவையான ஒரு கேப்டன் என்றும் கூறியுள்ளார்.