தோனியின் சாதனையை முறியடித்து தோனியை பின்னுக்கு தள்ளிய ரோஹித் சர்மா !
கடந்த 02-ம் தேதி நடந்த போட்டியில் பங்களாதேஷ் அணியும் , இந்திய அணியும் மோதியது. இப்போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 314 ரன்கள் குவித்தது.
பின்னர் இறங்கிய பங்களாதேஷ் அணி 48 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது 286 ரன்கள் எடுத்து 28 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி தோல்வியடைந்தது.
இந்நிலையில் இப்போட்டியில் இந்தியா அணியின் தொடக்க வீரராக ரோஹித் சர்மா களமிறங்கி நிதானமாகவும் ,அதிரடியாவும் விளையாடி 92 பந்தில் 104 ரன்கள் குவித்தர்.அதில் 7 பவுண்டரி ,5 சிக்ஸர் விளாசினார்.
ரோஹித் சர்மா இப்போட்டியில் 5 சிக்ஸர் அடித்ததன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிக சிக்ஸர் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் ரோஹித் சர்மா முதலிடம் பிடித்தார்.இதற்கு முன் தோனி 348 ஒருநாள் போட்டியில் 228 சிக்ஸர் அடித்து முதலிடத்தில் இருந்தார்.
ஆனால் ரோஹித் சர்மா தோனி சாதனையை 213 போட்டிகளில் 230 சிக்ஸர் அடித்து அவரது சாதனையை முறியடித்து தோனியை பின்னுக்கு தள்ளினார்.