இந்திய அணியின் கேப்டன் ஆகுகிறார் ரோஹித் சர்மா..!!
இந்திய அணியின் நிரந்தர தலைவராக இருக்க நான் தயாராக இருப்பதாக அதிரடியாக கூறி கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ரோஹித் சர்மா.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆசிய கோப்பையை வென்றுள்ளது. தலைவர் கோலிக்கு ஆசிய கோப்பை தொடர்களில் ஓய்வு அளிக்கப்பட்டதால் தற்காலிக தலைவராக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா, அணியை சிறப்பாக வழிநடத்தி சென்றார். அதுமட்டுமல்லாமல் அவருடைய இந்த தலைமை பொறுப்பை கையாளும் விதம் குறித்து பல முன்னாள் ஜாம்பவான்கள் பாராட்டியுள்ளனர்.
ஏற்கனவே விராட் கோலியின் தலைமை மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்து வருகின்றது. பந்து வீச்சாளர்களை பயன்படுத்தும் விதம், கள வியூகம் அமைப்பதில் ஆகியவற்றில் பல குறைபாடுகள் உள்ளன. கோலியின் தலைமை பல விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ள நிலையில், கிடைத்த வாய்ப்பை மீண்டுமொரு முறை சிறப்பாக பயன்படுத்தி தன்னை ஒரு தலைவராக மீண்டும் நிரூபித்துள்ளார் ரோஹித் சர்மா.அவரின் தலைமையின் கீழ் இதுவரை எந்த தொடரையும் இந்திய அணி இழந்ததில்லை. இலங்கைக்கு எதிரான தொடர், நிதாஹஸ் டிராபி ஆகியவற்றை ரோஹித் தலைமையிலான இந்திய அணி வென்றது. இந்நிலையில் தற்போது மிகப்பெரிய கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான ஆசிய கோப்பை தொடரையும் ரோஹித் தலைமையில் இந்திய அணி வென்றுள்ளது.
ரோஹித் சர்மா களத்தில் சில நேரங்களில் சாதுர்யமாக நடந்துகொள்வது, பந்துவீச்சாளர்களை பயன்படுத்தும் விதம், கள வியூகம், வீரர்களை கையாள்வது என அனைத்திலுமே கோலியை விட சிறப்பாகவே செயல்படுகிறார். ரோஹித் சர்மாவின் தலைமை சிறப்பாக இருப்பதால், இந்திய அணியின் தலைமை யார் மேற்கொள்வது என்ற விவாதம் எழ தொடங்கியுள்ளது.ரோஹித் சர்மாவின் தலைமையில் ஆசிய கோப்பையை இந்திய அணி வென்றுள்ள நிலையில், Wah Cricket என்ற கிரிக்கெட் இணையதளத்திற்கு ரோஹித் சர்மா அளித்த பேட்டியின் போது, இந்திய அணியின் நிரந்தர தலைவராக தயாரா? என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அதற்கு பதிலளித்த ரோஹித் சர்மா, நாங்கள் இங்கு நன்றாகத்தானே ஆடினோம். பிறகு ஏன் கூடாது? இந்திய அணியின் நிரந்தர தலைவராகும் வாய்ப்பு கிடைத்தால், கண்டிப்பாக தலைவர் பொறுப்பை ஏற்று அணியை சிறப்பாக வழிநடத்த தயாராக உள்ளேன் என நம்பிக்கையுடனும் உறுதியுடனும் பதிலளித்தார்.இதனால் இந்திய கிரிக்கெட்டுக்கு அணியின் தலைவராக ரோஹித் சர்மா இருப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
DINASUVADU