அரையிறுதியில் அதிரடி பேட்டிங்.! ஒரே ஆட்டத்தில் பல சாதனைகளை படைத்த ரோஹித் ஷர்மா.!

IND vs NZ: நடப்பு ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரின் முதல் அரையிறுதி போட்டியானது, இன்று நடைபெற்று வருகிறது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகள் பலப்பரீச்சை செய்து வருகின்றன.
இந்த போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இதனால் இந்திய அணியில் முதலில் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, சுப்மன் கில் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி விளையாடினார்கள். ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூடும் வகையில் ஆரம்பம் முதலே இருவரும் அதிரடியாக விளையாடினார்கள்.
ரோஹித் ஷர்மா பவர் பிளேவில் அதிரடியாகவும் கவனமாகவும் விளையாடி சிக்ஸர்கள் மற்றும் பௌண்டரிகளைக் பறக்கவிட்டார். சுப்மன் கில் நிதானமாக விளையாடி வருகிறார். தொடர்ந்து விளையாடிய ரோஹித் ஷர்மா 8.2-வது ஓவரில் டிம் சவுத்தி வீசிய பந்தில், வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து 47 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்திருந்தாலும் அதே நேரத்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களை அடித்தார். இது அவரது சாதனைகளுக்கு வழிவகுத்தது. அதன்படி, 4.2 வது ஓவரில் போல்ட் வீசிய பந்தை, மைதானத்திற்கு வெளியே பறக்க விட்டு சிக்ஸரை அடித்தார்.
ஒரே சீசனில் அதிக சிக்ஸர்கள்
இந்த சிக்ஸரை அடித்ததன் மூலம், நடப்பு உலகக்கோப்பையில் 27 சிக்ஸர்களைப் பதிவு செய்த ரோஹித் ஷர்மா, ஒருநாள் உலகக் கோப்பையின் ஒரே சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இதனால், ஒரே உலக கோப்பைத் தொடரில் 26 சிக்ஸர்கள் அடித்த கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்தார். நடப்புத் தொடரில் 28 சிக்ஸர்களை அடித்துள்ளார் ரோஹித் ஷர்மா.
உலகக் கோப்பை வரலாற்றில் அதிக சிக்ஸர்கள்
2015ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டியில் கிறிஸ் கெய்ல் 26 ரன்கள் எடுத்திருந்தார். மேலும், தொடர்ந்து 3 சிக்ஸர்களை அடித்த ரோஹித் சர்மா, மற்றொரு சாதனையாக உலகக் கோப்பை வரலாற்றில் 50 சிக்ஸர்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதிலும் உலகக் கோப்பையில் 49 சிக்ஸர்கள் அடித்த கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்துள்ளார். இந்தப் போட்டியில் அடித்த 4 சிக்ஸர்களைத் தொடர்நது ரோஹித் சர்மா, உலகக்கோப்பையில் மொத்தமாக 51 சிக்சர்களை அடித்துள்ளார்.
அதிவேகமாக 1500 ரன்கள்
மேலும், நியூசிலாந்துக்கு எதிராக அரைசதத்தை தவறவிட்டாலும், உலகக் கோப்பை அரையிறுதியில் 47 ரன்கள் எடுத்ததன் மூலம் ரோஹித் சர்மா, உலக கோப்பையில் அதிவேகமாக 1500 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையின் மூலம் உலக கோப்பையில் அதிவேகமாக 1500 ரன்களைக் கடந்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
AUSvENG : முடிஞ்சா தொட்டுப்பார்.! வெளுத்து வாங்கிய பென் டக்கெட்! ஆஸி.க்கு இமாலய இலக்கு!
February 22, 2025
காமராஜர் ஆட்சி : காங்கிரஸ் கட்சிக்குள் மோதல்? செல்வப்பெருந்தகை vs மாணிக்கம் தாகூர்!
February 22, 2025
AUS v ENG : முக்கிய வீரர்கள் இல்லாமல் வெற்றிபெறுமா ஆஸி…இங்கிலாந்துக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
February 22, 2025
அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!
February 22, 2025