இத்தனை போட்டோ எடுத்து என்ன செய்வீங்க.? ஏர்போர்ட்டில் கடுப்பான ரோஹித் ஷர்மா.!
ஏர்போர்ட்டில் புகைப்படங்கள் எடுத்த புகைப்பட கலைஞர்களை பார்த்து கேப்டன் ரோஹித் சர்மா எதற்காக இத்தனை புகைப்படங்கள் எடுக்குறீங்க என கேட்டுள்ளார்.
நாளை முதல் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வங்கதேச அணிக்கு எதிராக அவர்கள் மண்ணில் 3 ஒருநாள் போட்டி தொடர் மற்றும் 2 டெஸ்ட் போட்டி தொடரில் பங்கேற்க உள்ளது.
இதற்காக இன்று விமானம் மூலம் வங்கதேசம் புறப்பட்டனர். அப்போது ஏர்போர்ட்டில் கேப்டன் ரோஹித் சர்மாவை பலரும் புகைப்படம் எடுத்தனர். அப்போது ரோஹித் சர்மா அந்த புகைப்பட கலைஞர்களை பார்த்து எதற்காக இந்தனை புகைப்படம் எடுக்கிறீங்க.? இத்தனை போட்டோ வைத்து என்ன செய்வீங்க ? என கடிந்து கொண்டார்.
அதற்கு அந்த புகைப்பட கலைஞர் இது எங்கள் கடமை என கூறியுள்ளார். ரோஹித் சர்மா அப்படி கேள்வி கேட்கும் புகைப்படங்கள் மாட்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது.