ரோஹித் சர்மாவுக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கோலி!

Published by
பாலா கலியமூர்த்தி

தென்னாபிரிக்கா தொடரை கோலி புறக்கணிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் விளக்கமளித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுபயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்காக விராட் கோலி தலைமையிலான டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டியிருந்த நிலையில், ஒருநாள் தொடரில் கோலி பங்கேற்கமாட்டார் என இணையத்தில் தகவல் வெளியாகின.

ஒருநாள் போட்டிக்கு ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில், தென்னாபிரிக்கா தொடரின்போது ஓய்வு எடுப்பதன் மூலம் கோலி தவறான நேரத்தில் தவறான முடிவை எடுத்து குழப்பத்தை ஏற்படுத்துகிறார் என முன்னாள் கேப்டன் உள்ளிட்ட பலர் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் தற்போது சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய விராட் கோலி, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட தயாராக உள்ளேன். ஓய்வு எடுக்க ஒருபோதும் நான் விரும்பியது இல்லை. ரோஹித் சர்மா தலைமையில் தென்னாப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவேன் என தென்னாபிரிக்கா தொடரை கோலி புறக்கணிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் விளக்கமளித்துள்ளார்.

ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளின் கேப்டன் தொடரின் கேப்டன் பொறுப்பில் இருந்து நான் விடுவிக்கப்பட்டதாக தேர்வுக்குழுவினர் கூறினர். ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. இதையே 2 ஆண்டுகளாக கூறி வருகிறேன். மறுபடியும் அதையே கேள்வியாக எழுப்புவது சோர்வை அளிக்கிறது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மாவின் திறனை மிஸ் செய்வோம். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணித்தேர்வு குறித்து ஆலோசிக்கப்ட்ட பின்பு, ஒருநாள் அணிக்கு நான் கேப்டன் இல்லை என தேர்வுக்குழு தலைவர் என்னிடம் கூறினார்.

டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலக வேண்டாம் என விராட் கோலியிடம் சவுரவ் கங்குலி தெரிவித்திருந்த நிலையில், அப்படி யாரும் என்னிடம் என விராட் கோலி தெரிவித்தாக கூறப்படுகிறது. கேப்டனாக இல்லாமல் அணி வீரராக தயார் என ஏற்கனவே தேர்வுக்குழுவிடம் கூறிவிட்டேன்.

வதந்திகள் யார் பரப்புகிறார்களோ அவர்களிடம் கேளுங்கள் என ஒருநாள் கிரிக்கெட் அணி கேப்டனாக நீடிக்க கோலி விரும்பவில்லை என கங்குலி கூறிய நிலையில், விளக்கமளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

தமிழகத்தில் சனிக்கிழமை (16/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

தமிழகத்தில் சனிக்கிழமை (16/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…

53 mins ago

“கட்சிக்கு துரோகம் செய்தால் மன்னிக்கவே மாட்டேன்”…அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…

1 hour ago

கங்குவா சவுண்ட் அதிகமா இருக்கு பாஸ்! ஞானவேல் ராஜா கொடுத்த ஐடியா!

சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…

3 hours ago

சாமியே சரணம் ஐயப்பா! சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…

4 hours ago

“விஜய் மாதிரி நானும் உச்சபட்ச நடிகராக இருக்கும்போதுதான் அரசியலுக்கு வந்தேன்” – சரத்குமார்!

சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…

4 hours ago

திருக்கார்த்திகை 2024- திருவண்ணாமலை திருக்கார்த்திகை எப்போது?.

திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…

4 hours ago