நேற்றைய போட்டியில் கெயில் சாதனையை முறியடிக்க தவறிய ரோஹித்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரரான ரோஹித் சர்மா 24 ரன்கள் அடித்தார்.அதில் 2 சிக்ஸர் அடங்கும்.
இதுவரை நடைபெற்ற டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் 105 சிக்ஸர்களுடன் முதல் இடத்தில் உள்ளார். இப்போட்டிக்கு முன் ரோஹித் ஷர்மா 102 சிக்ஸர் அடித்து இருந்தார்.நேற்றைய போட்டியில் 2 சிக்ஸர் அடித்ததன் மூலம் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்தார். இன்னும் ஒரு சிக்ஸர் அடித்தால் கிறிஸ் கெயில் சிஸேரை சமன் செய்து விடுவார்.
தற்போது முதல் இடத்தில் கிறிஸ் கெயில் 105 சிக்ஸர்களுடனும் , இரண்டாவது இடத்தில் ரோஹித் ஷர்மா 104 சிக்ஸர்களுடனும் , நியூஸிலாந்து அணியின் மார்டின் குப்தில் 103 சிக்ஸர்களுடனும் 3 வது இடத்தில் உள்ளனர்.