சச்சின் சாதனையை முறியடிக்காமல் வெளியேறிய ரோஹித் , டேவிட் வார்னர் !
கடந்த 11-ம் தேதி நடந்த இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியும் , ஆஸ்திரேலிய அணியும் பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் மோதியது . டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் களமிங்கிய ஆஸ்திரேலிய அணி 49 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 223 ரன்கள் அடித்தனர். பின்னர் இறங்கிய இங்கிலாந்து அணி 32.1 ஓவரில் 226 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டை இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் 2003-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் சச்சின் 673 ரன்களை அடித்து இருந்தார். அதுவே இதுவரை ஒரு உலகக்கோப்பை தொடரில் அடித்த அதிகபட்ச ரன்னாக உள்ளது.
நடப்பு உலகக்கோப்பையில் லீக் போட்டியில் டேவிட் வார்னர் 638 ரன்கள் அடித்து இருந்தார். எனவே டேவிட் வார்னர் 35 ரன்கள் எடுத்து இருந்தால் சச்சின் சாதனையை முறியடித்து இருப்பார் ஆனால் அரையிறுதி போட்டியில் 9 ரன்கள் எடுத்து டேவிட் வார்னர் அவுட் ஆனார்.
ரோஹித் சர்மா நடப்பு உலகக்கோப்பையில் 647 ரன்கள் அடித்து இருந்தார். ஆனால் ரோஹித் சர்மா அரையிறுதி போட்டியில் 27 ரன்கள் அடித்து சச்சின் சாதனையை முறியடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ரோஹித் சர்மா 1 ரன்னில் வெளியேறி ரசிகர்களை ஏமாற்றினார்.
இதன் மூலம் நடப்பு உலக்கோப்பையில் ரோஹித் சர்மா மற்றும் டேவிட் வார்னர் இருவருமே சச்சின் சாதனையை முறியடிக்காமல் உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறினர்.