ஹைதராபாத் மற்றும் மும்பை அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச முடிவு செய்ததது. முதலில் பந்து வீசினாலும் மும்பை அணியை அற்புதமாக கட்டுக்குள் கொண்டுவந்தது. 20 ஓவர்களின் முடிவில் மும்பை அணி வெறும் 136 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதன் பின்னர் களமிறங்கிய ஹைதராபாத் அணியால் மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை. குறிப்பாக மும்பை அணியின் அறிமுக வீரர் வெஸ்ட் இண்டீஸ் வீரரான அல்ஸாரி ஜோசப் எதிர்ணி வீரர்களை தனது வேகத்தால் பயமுறுத்தினார்.
அவர் மொத்தம் 3.4 ஓவர்கள் மட்டுமே வீசி 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் அந்த அணி 17.4 ஓவர்களில் 96 ரன்கள் மட்டுமே எடுத்து தனது 10 விக்கெட்டையும் இழந்தது. இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை அதன் சொந்த மைதானத்திலேயே வைத்து 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றி குறித்து பேசிய ரோகித் சர்மா கூறியதாவது…
136 ரன் என்பது சற்று மிகவும் குறைவான ஒன்றாகும். அவர் அற்புதமாக பந்து வீசினார் .கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் இருந்த அதே நம்பிக்கையை இங்கு கொண்டு வந்து வைத்திருக்கிறார். இந்த இடத்தில் 180 ரன் அடித்தால் மட்டும் வெற்றி பெற முடியும். 6 விக்கெட் வீழ்த்தி எங்களது வெற்றிக்கு அல்ஸாரி ஜோசப் காரணமாக இருந்தார் என்று கூறியுள்ளார் ரோகித் சர்மா.
சென்னை: நாளை (டிச.05) தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால், காலை 7…
சென்னை: அமலாக்கத்துறை சோதனையில் எந்த ஆவணமும் பறிமுதல் செய்யப்படவில்லை என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் காந்திநகர்…
சென்னை: அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் இப்போது தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள்…
சென்னை: இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படம் எப்போது தான் வெளியாகும் என 2 ஆண்டுகளுக்கு மேல்…
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் கோட்டையூர் கிராமத்தில் செயல்பட்டுவந்த தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலையில் மருந்து கலக்கும் அறையில் எதிர்பாராதவிதமாக…
நார்வே: உலகின் நம்பர்.1 செஸ் வீரரும் ஐந்து முறை உலக சாம்பியனுமான மேக்னஸ் கார்ல்சன் தனது காதலியான 26 வயதான…