மும்பை மற்றும் சென்னை இடையேயான ஐபிஎல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் துவங்கியது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தீர்மானித்தது. இதன்படி முதல் ஆட்டத்தில் முதல் 18 ஓவர்கள் வரை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தது சென்னை அணி. ஆனால் கடைசி 2 ஓவர்களில் ருத்ரதாண்டவம் ஆடிய ஹர்திக் பாண்டியா 8 பந்துகளில் 25 ரன்கள் குவித்தார் .இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 170 ரன் விளாசிய.
கடின இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணியால் துவக்கம் முதலே சரியாக ஆட முடியவில்லை. சென்னை அணியின் துவக்க வீரர்கள் இருவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார். அதன் பின்னர் வந்த சுரேஷ் ரெய்னா 16 ரன்களிலும் தோனி 12 ரன்களிலும் வெளியேறினர்.
கேதர் ஜாதவ் மட்டும் நிலைத்து நின்று 54 பந்துகளில் 58 ரன்கள் அடித்தார். ஆனால் மும்பையின் ஹர்திக் பாண்டியா 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார் . பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் இரண்டிலும் ஒற்றை ஆளாக சென்னை அணியை வீழ்த்தினார் ஹர்திக் பாண்டியா. சென்னை அணி 20 ஓவர்களின் முடிவில் 133 ரன்கள் மட்டுமே எடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது
இந்த வெற்றி குறித்து பேசிய ரோகித் சர்மா கூறியதாவது…
முதல் இரண்டு போட்டிகளில் தோற்ற பின்னர் எங்களுக்கு ஒவ்வொரு போட்டியும் முக்கியமானதாக மாறிவிட்டது. சரியாக எங்களால் பேட்டிங் பிடிக்க முடியவில்லை. 170 ரன்கள் என்பது நல்ல ரன் ஆகும் . முதலில் ஒரு சில விக்கெட்டுகளை எடுத்து விட்டால் வெற்றி பெற்றுவிடலாம் என எண்ணிணோம்அதனையே செய்தோம் ஹர்திக் பாண்டியா பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அசத்தி விட்டார் அவர் இந்த வெற்றிக்கு காரணம் என்று புகழாரம் சூட்டியுள்ளார் ரோஹித் சர்மா
சென்னை : சீனாவில் பாதிக்கும் HMPV தொற்றானது, தற்போது தமிழகத்திலும் பரவ தொடங்கியுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும், சென்னையை…
டெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 1-3 என்ற கணக்கில்…
சென்னை : கலையரசன் ஒரு சிறந்த நடிகர் என பாராட்டு வாங்குவது பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. அதற்கு…
மெக்கா: இஸ்லாமியர்களின் புனித தலங்களான மெக்கா, மதீனா மழை வெள்ளத்தில் மிதக்கின்றன. சவுதி அரேபியாவின் மெக்கா மற்றும் மதீனாவில் நேற்று…
சென்னை : சமீபத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்ற சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு விழாவில் கருப்பு நிற துப்பட்டா அணிந்திருந்த…
டெல்லி: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை 6.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும்…