Rohit-Kohli [File Image]
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் டி20ஐ உலகக்கோப்பைத் தொடரில் விளையாடுவது குறித்து முடிவு செய்ய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் ஓவலில் நடந்த டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியில், இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததில் இருந்து விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா இருவரும் இந்தியாவுக்காக எந்த டி20ஐயும் விளையாடவில்லை.
இந்தியா அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்க உள்ளது. ஆனால் ரோஹித் ஷர்மாவும் விராட் கோலியும் ஒரு வருடத்திற்கும் மேலாக டி20 ஐ விளையாடாததால், அவர்கள் இந்த டி20 உலகக் கோப்பைத் தொடரிலும் பங்கேற்கமாட்டார்கள் என்று தகவல்கள் வெளிவந்தது.
இந்நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தின்படி, ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி இருவரும் விரும்பினால் அடுத்த ஆண்டு டி20 மற்றும் டி20 உலகக் கோப்பையில் விளையாடலாம். இந்த தொடரில் விளையாடலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய முழு அதிகாரமும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
மேலும், ஒருநாள் உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்தவர்களை எங்களால் நீக்க முடியாது. அவர்கள் இருவரும் எங்களின் மிகப்பெரிய வீரர்கள் என்றும் தெரிவித்துள்ளது. ஒருவேளை டி20 போட்டிகளில் இருந்து விலக ரோஹித் ஷர்மா முடிவு செய்தால், ஹர்திக் பாண்டியா மட்டுமே அணிக்கு கேப்டனாக இருப்பார். இல்லையெனில் துணை கேப்டனாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் குற்றசாட்டை முன்வைத்து புகார் அளித்து…
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக…
அமெரிக்கா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராத ஒரு போராக இருந்து வருகிறது. இதன் காரணமாக…
சென்னை : இன்று சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி துபாயில் நடைபெறுகிறது. இதில் ரோஹித் சர்மா…
துபாய் : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதி இன்று துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல்…
நாகை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நாகப்பட்டினத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இப்பயணத்தில் நாகை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டங்கள் தொடங்கி…