ரோஹித் மற்றும் விராட் கோலி விரும்பினால் டி20 உலகக்கோப்பையில் விளையாடலாம்.! பிசிசிஐ

Rohit-Kohli

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் டி20ஐ உலகக்கோப்பைத் தொடரில் விளையாடுவது குறித்து முடிவு செய்ய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் ஓவலில் நடந்த டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியில், இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததில் இருந்து விராட் கோலி மற்றும்  ரோஹித் ஷர்மா இருவரும் இந்தியாவுக்காக எந்த டி20ஐயும் விளையாடவில்லை.

ஐபிஎல்லில் இருந்து விலகிய பென் ஸ்டோக்ஸ்… சிஎஸ்கே அறிவிப்பு ..!

இந்தியா அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்க உள்ளது. ஆனால் ரோஹித் ஷர்மாவும் விராட் கோலியும் ஒரு வருடத்திற்கும் மேலாக டி20 ஐ விளையாடாததால், அவர்கள் இந்த டி20 உலகக் கோப்பைத் தொடரிலும் பங்கேற்கமாட்டார்கள் என்று தகவல்கள் வெளிவந்தது.

இந்நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தின்படி, ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி இருவரும் விரும்பினால் அடுத்த ஆண்டு டி20 மற்றும் டி20 உலகக் கோப்பையில் விளையாடலாம். இந்த தொடரில் விளையாடலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய முழு அதிகாரமும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

IPL 2024: சர்ஃபராஸ் கான் மற்றும் மணீஷ் பாண்டேவை விடுவிக்க டெல்லி கேபிடல்ஸ் முடிவு.!

மேலும், ஒருநாள் உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்தவர்களை எங்களால் நீக்க முடியாது. அவர்கள் இருவரும் எங்களின் மிகப்பெரிய வீரர்கள் என்றும் தெரிவித்துள்ளது. ஒருவேளை டி20 போட்டிகளில் இருந்து விலக ரோஹித் ஷர்மா முடிவு செய்தால், ஹர்திக் பாண்டியா மட்டுமே அணிக்கு கேப்டனாக இருப்பார். இல்லையெனில் துணை கேப்டனாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்