ஐசிசி அறிவித்த உலகக்கோப்பை கனவு அணியில் இடம் பெற்ற ரோஹித் , பும்ரா!
நேற்று பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் இங்கிலாந்து , நியூஸிலாந்து லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் மோதியது . இப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று முதல் முறையாக உலகக்கோப்பையை முத்தமிட்டது.
இந்நிலையில் ஐசிசி தற்போது உலககோப்பையின் கனவு அணியின் வீரர்களை வெளியிட்டு உள்ளது. ஐசிசி நடத்தும் கோப்பை போட்டிகள் முடிந்த பிறகு கனவு அணியை வெளியிடுவது ஐசிசி வழக்கம். இந்நிலையில் நேற்று உலகக்கோப்பை முடிந்த நிலையில் ஐசிசி உலகக்கோப்பையின் கனவு அணியை வெளியிட்டு உள்ளது. உலகக்கோப்பை கனவு அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த கனவு அணியில் இந்திய அணியில் இருந்து பூம்ரா , ரோஹித் சர்மா இருவரும் இடம் பிடித்து உள்ளனர்.
1. ரோஹித் சர்மா (இந்தியா)
2. ஜேசன் ராய் (இங்கிலாந்து)
3. கேன் வில்லியம்சன் (கேப்டன் ) (நியூசிலாந்து)
4. ஷாகிப் அல் ஹசன் (பங்களாதேஷ்)
5. ஜோ ரூட் (இங்கிலாந்து)
6. பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து)
7. அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர் ) (ஆஸ்திரேலியா)
8. மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா)
9. ஜோஃப்ரா ஆர்ச்சர் (இங்கிலாந்து)
10. லாக்கி பெர்குசன் (நியூசிலாந்து)
11. ஜஸ்பிரீத் பும்ரா (இந்தியா)
12. ட்ரெண்ட் போல்ட் (நியூசிலாந்து)