ரோஹித் அதிரடி.. 195 ரன்கள் குவித்த மும்பை ..!
இன்று ஐபிஎல் டி20 தொடரின் 5-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் மோதுகின்றன. இப்போட்டி ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில் இறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் மற்றும் குயின்டன் டி கோக் இருவரும் களமிறங்க ஆட்டம்தொடக்கத்திலே குயின்டன் 1 ரன் எடுத்து வெளியேறினார். பின்னர் சூர்யகுமார் யாதவ் இறங்க ரோஹித், சூர்யகுமார் கூட்டணியில் அணியின் எண்ணிக்கை சற்று உயர்ந்தது.
சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் அரைசதம் அடிக்காமல் 47 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்து இறங்கிய திவாரி 21 ரன்னுடன் வெளியேற ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாக ரோஹித் 80 ரன்கள் குவித்தார். இறுதியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 195 ரன்கள் எடுத்தனர்.
196 ரன்கள் இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்க உள்ளது.