இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கென்னிங்டன் ஓவல், லண்டன் வைத்து நடைபெறுகிறது.டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது இப்போட்டியில் விராட் கோலி மற்றும் அர்ஷ்தீப் சிங் காயம் காரணமாக விளையாடவில்லை.
இங்கிலாந்து பேட்டிங்:
முதலில் பேட்டிங்கை ஆரம்பித்த முதலே தடுமாறியது.தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் ஜோடி ஜஸ்பிரித் பும்ரா பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.ஜேசன் ராய் ரன் ஏதும் எடுக்காமலும் ஜானி பேர்ஸ்டோவ் 7 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்.
இவரை தொடர்ந்து களமிறங்கிய ஜோ ரூட்(0) பும்ராவின் புயலில் டக் அவுட் ஆகினார்.அடுத்ததாக முகமது ஷமியிடம் பென் ஸ்டோக்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.லியாம் லிவிங்ஸ்டோன் 8 பந்துகளை சந்தித்த நிலையில் பும்ரா வீசிய பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் கிளீன் போல்ட் ஆகினார்.அதன் பின் வந்தவர்கள் சொற்ப ரன்களிலே ஆட்டம் இழந்தனர் .இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 30 ரன்களை எடுத்தார்.இங்கிலாந்து அணி 25 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 110 ரன்களை எடுத்தது .
இந்திய அணியில் பும்ரா 19 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்களை எடுத்தார்.ஷமி 3 விக்கெட் மற்றும் பிரசித் தலா ஒரு விக்கெட் எடுத்தனர் .
இந்தியா பேட்டிங்:
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்கார்களாக களமிறங்கிய ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் ஜோடி இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை திணறடித்தனர்.ரோஹித் ஷர்மா (76), ஷிகர் தவான் (31) ரன்களை இறுதி வரை இருவரும் ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு வித்திட்டனர்.இந்திய அணி 18.4 ஓவர்கள் முடிவில் 114 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியா (பிளேயிங் லெவன்): ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் , ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா
இங்கிலாந்து (பிளேயிங் லெவன்): ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, கிரேக் ஓவர்டன், டேவிட் வில்லி, பிரைடன் கார்ஸ், ரீஸ் டாப்லி.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…