மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்த முதல் அரையிறுதியில் நியூசிலாந்தை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி நாளை மறுநாள் நடைபெறவுள்ள உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சதம் அடித்து இந்தியாவுக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தனர். அதே நேரத்தில் முகமது ஷமி 9.5 ஓவர்களில் 57 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 7 விக்கெட்களை வீழ்த்தினார்.
முதலில் இறங்கிய இந்திய அணி 4 விக்கெட்டை இழந்து 397 எடுத்தது. அடுத்து இறங்கிய நியூசிலாந்து அணி டேரில் மிட்செல் அதிரடியாக 134 ரன்களும், கேன் வில்லியம்சன் 64 ரன்களும் எடுத்து 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து அரையிறுதியில் இருந்து வெளியேறியது. இறுதிப்போட்டிக்கு சென்ற இந்திய அணி அனைவரும் பாராட்டிய நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சிக்கந்தர் பக்த் தனது வினோதமான பேச்சால் சர்ச்சையை கிளப்பினார்.
தனியார் செய்தி நிறுவனம் ஒன்றில் பேசிய பாகிஸ்தான் முன்னாள் பந்துவீச்சாளர் சிக்கந்தர் பக்த், இந்திய அணியும், ரோஹித் சர்மாவும் டாஸ் போடுவதில் முறைகேடு செய்வதாக குற்றம் சாட்டினார். இதுகுறித்து பேசியபோது, ” ரோஹித் சர்மா டாஸ் சுண்டி விடும்போது நாணயத்தை வெகுதூரம் வீசுகிறார். இதனால் அருகில் இருக்கும் மற்ற அணி கேப்டன்கள் அந்த நாணயத்தை சென்று பார்ப்பதே இல்லை. ஐசிசிமற்றும் பிசிசிஐ ஆகியவற்றுடன் இணைந்து ரோஹித் சர்மா டாஸ் போடுவதில் முறைகேடு செய்து தங்கள் பக்கம் போட்டியை சாதகமாக மாற்றிக்கொள்கிறார்கள்” என்றார்.
இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் ” நாணயம் எங்கு விழ வேண்டும் என்று யார் முடிவு செய்வார்கள்? எனக்கு தர்ம சங்கடமாக இருக்கிறது . எனக்கு அந்த விஷயம் குறித்து கருத்து தெரிவிக்கவே விருப்பமில்லை” என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…