நியூ..,சொந்த மண்ணில் சாய்த்தது சாதனை தான்..!சொல்கிறார் ரோகித் ..!

Default Image
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 5 வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
நியூசிலாந்தை வீழ்த்திய இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா வெற்றி குறித்து கூறுகையில் டாஸ் போடுவதற்கு முன் பிட்ச்சை பார்த்தபோது ஈரப்பதமாக  காணப்பட்டது. இதனால் பிட்ச் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பது தெரியும்.
Image result for india vs new zealand

ஆனால் நம் அணி உலக கோப்பை போட்டிக்கு தயாராகி வரும் நிலையில் ஒரு அணியாக இது போன்ற கடினமான சீதோஷ்ண நிலையை எப்படி சமாளிப்பது என்பதை கருத்தில் கொண்டு சோதித்து பார்க்க விரும்பினோம்.அன்று அதனால் தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தேன். ஒரு வேளை இது எதிர்பார்க்கபடும் தொடரை நிர்ணயிக்கும் ஆட்டமாக இருந்திருந்தால் நான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்திருப்பேன்.

ஒரு பிட்ச்சில் பந்து நன்றாக ஸ்விங் ஆகும் போது எந்த மாதிரி பேட் செய்ய வேண்டும் இந்தியா கற்றுக்கொள்ள வேண்டும்.ஆனால் 4 விக்கெட்டுகளை வேகமாக இழந்தது சற்று அதிர்ச்சியான போதிலும் அடுத்து வந்த வீரர்கள் சிறப்பாக ஆடினர். இந்த நிகழ்வு அவர்களுக்கு இது போன்ற சூழலில் என்ன செய்ய வேண்டும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது இப்போ தெரிந்து இருக்கும்.

Image result for india vs new zealand

அணியின் முதல் 30 ஓவருக்குள் ரன்ரேட் மோசமாக இருந்தது. அதன் பின்  250 ரன்களை தாண்டியது நல்ல அறிகுறியாகும்.எதிரணியான நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.அதன்படி அவர்களை 4-1 என்ற கணக்கில் வென்றது இந்தியாவின் மிகப்பெரிய சாதனையாகும். ஆனால் கடந்த முறை இங்கு இந்தியா இதனை 0-4 என்ற கணக்கில் தோற்றோம் என்பது நினைவில் உள்ளது. இப்போது சிறப்பாக விளையாடி சாதித்து காட்டி உள்ளோம்.

Image result for india vs new zealand

இதில் விஜய் சங்கரின் பேட்டிங் மிக அருமையாக இருந்தது. துரதிர்ஷ்டவசமாக அவர் ரன்-அவுட் ஆகி விட்டார். ஆனால் அவர் ஆடிய விதத்தை எல்லாம் பார்க்கும் போது 50 ரன் மட்டுமல்லாமல் ஏன் 100 ரன்கள் கூட எடுத்திருக்கலாம். இதில் கேதர் ஜாதவ் 2வது சுழற்பந்து வீச்சாளராக இருக்கும் போது அணிக்கு ஒரு சமச்சீர் தன்மை வந்து விடுகிறது. இதில் என்னை பொறுத்தவரை அவரை ஒரு முறையான சுழற்பந்து வீச்சாளராகவே நான் பார்க்கிறேன். ஒவ்வொரு ஆட்டத்திலும் அவர் 6 அல்லது 7 ஓவர்கள் பந்து வீசுவதோடு அணிக்கு விக்கெட்டுகளையும்  வீழ்த்துகிறார்.என்று பெருமிதம் பொங்க கூறுகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்