முதல் டி20 போட்டியில் நியூஸிலாந்து அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.மேலும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இன்று 2-வது டி20 போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
பின்னர் பேட்டிங்கை தொடங்கிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 158 ரன்கள் அடித்தது.
இதன் பின் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 10 ஓவர்களின் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 83 ரன்கள் அடித்துள்ளது.களத்தில் தவான் 28*,பண்ட் 1* ரன்கள் அடித்துள்ளனர்.
இந்நிலையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா இந்த போட்டியில் 50 ரன்கள் அடித்தார். இதனால் சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து, இந்திய வீரர் ரோகித் சர்மா சாதனை படைத்துள்ளார்.இந்த போட்டியில் அடித்த 50 ரன்களுடன் சேர்த்து 2,280 ரன்கள் அடித்துள்ளார்.இதனால் டி-20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த நியூஸிலாந்து வீரர் மார்ட்டின் குப்தில் சாதனையை தகர்த்தார் ரோகித் சர்மா.மார்ட்டின் குப்தில் 2272 ரன்கள் அடித்து முன்னிலையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…