நியூஸிலாந்து  வீரர் சாதனையை தகர்த்த ரோகித் சர்மா!!இனி ரோகித் தான் இதுல டாப்!!

Default Image

முதல் டி20 போட்டியில்  நியூஸிலாந்து அணி  80  ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.மேலும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில்  முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இன்று 2-வது டி20 போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற  நியூஸிலாந்து  அணி கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

பின்னர் பேட்டிங்கை தொடங்கிய  நியூஸிலாந்து  அணி 20 ஓவர்களின் முடிவில்  8 விக்கெட்டை இழந்து  158  ரன்கள் அடித்தது.

இதன் பின்  பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 10 ஓவர்களின் முடிவில்  1 விக்கெட்டை இழந்து  83 ரன்கள் அடித்துள்ளது.களத்தில் தவான் 28*,பண்ட் 1* ரன்கள் அடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா இந்த  போட்டியில் 50 ரன்கள் அடித்தார். இதனால் சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து, இந்திய வீரர் ரோகித் சர்மா சாதனை படைத்துள்ளார்.இந்த போட்டியில் அடித்த 50 ரன்களுடன் சேர்த்து  2,280 ரன்கள் அடித்துள்ளார்.இதனால்  டி-20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த நியூஸிலாந்து  வீரர் மார்ட்டின் குப்தில் சாதனையை தகர்த்தார் ரோகித் சர்மா.மார்ட்டின் குப்தில் 2272 ரன்கள் அடித்து முன்னிலையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Live Coverage 1
Ministery Senthil Balaji
Newzeland MP Dance
Meta Fine
SA vs IND, 4th T20
Rain Update
Kanguva - Review