ரோகித் சர்மா இருப்பது எனக்கு மிகவும் உதவியாக உள்ளது ..!ஷிகர் தவான் நெகிழ்ச்சி

Default Image

ரோகித் சர்மா உடன் ஆடுவது உதவிகரமாக இருக்கிறது என்று தவான் தெரிவித்துள்ளார்.

ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இறுதிப்போட்டிக்கு இந்திய அணி மற்றும் வங்கதேச அணிகள் விளையாடியது .இந்த போட்டி துபாயில் நடைபெற்றது.

நேற்றைய போட்டியில்  இந்திய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. 7-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

இந்நிலையில் ஆசிய கோப்பை தொடரில் 342 ரன்கள் குவித்த இந்திய வீரர் ஷிகர் தவான், தொடர் நாயகனாக விருது வாங்கினார்.

Image result for shikhar dhawan rohit asia cup

இதன் பின்னர் ஷிகர் கூறுகையில், ஆசிய கோப்பை தொடரில் விளையாடியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த தொடர் எனக்கு நல்ல தொடராக அமைந்தது.குறிப்பாக எனது பேட்டிங்கை ரசித்தேன், அப்படியே தொடர வேண்டும் என்று விரும்புகிறேன். ரோகித் சர்மா உடன் ஆடுவது உதவிகரமாக இருக்கிறது. துவக்கத்தில் அவரும் தொடர்ந்து சிறப்பாக ஆடுவது எனக்கும் முக்கியம் தான். சில சமயம் அவர் அடித்து ஆடுவார், சில சமயம் நான் ஆடுவேன்.சர்மாவுக்கும் இந்த ஆசிய கோப்பை சிறப்பாக அமைந்துள்ளது” என்று தவான் கூறினார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்