ரோகித் – தவான் அடி துவம்சம்!! இந்திய அணி அபார துவக்கம்!!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்திய அணி டாஸ் வென்றுள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ததுள்ளது.
இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களை துவக்கம் முதலே துவம்சம் செய்து அதிரடியாக ஆடினார். இந்திய அணி அபாரமாக ஆடி 50 ஓவர்களில் 324 ரன்கள் குவித்தது. தற்போது கடினமான இலக்கை துரத்திய ஆடிவரும் நியூசிலாந்து அணி முதல் 15 ஓவர்களுக்குள் 92 ரன்கள் மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.