RRvsDC : ரியான் பராக் ஆட்டத்தால் தப்பித்த ராஜஸ்தான் ..!! டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு ..!

Published by
அகில் R

RRvsDC : ஐபிஎல் தொடரின் 9-தாவது போட்டியாக ராஜஸ்தான், டெல்லி அணி இடையே நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன் மூலம் பேட்டிங்கை செய்ய களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு அதிர்ச்சிகள் காத்திருந்தது. ராஜஸ்தான் அணியில் அட்டகாசமான ஃபார்மில் இருக்கும் இளம் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

அவரை தொடர்ந்து களமிறங்கிய அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனும் 15 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பிறகு களத்தில் இருந்த பட்லரும் பேட்டிங்கில் 11 ரன்களில் சரிக்கினார். டெல்லி அணியின் அபார பந்து வீச்சால் 7.2 ஓவர்களில் ராஜஸ்தான் அணி வெறும் 36-3 என்ற இக்கட்டான தருணத்தில் இருந்தனர். இதனால் ராஜஸ்தான் அணி டெல்லி அணியின் பந்து வீச்சில் மிகவும் திணறியது.

அதன் பின் அஸ்வினும், ரியான் பராகும் நிதானத்துடன் விளையாடி அணியின் ஸ்கோரை படி படியாக உயர்த்தினார்கள். அவர்கள் இருவரது பொறுமையான ஆட்டத்தால் ராஜஸ்தான் அணி இக்கட்டான தருணத்தில் இருந்து தப்பினாலும் டெல்லி அணியின் பந்து வீச்சுக்கு தடுமாறியே விளையாடியது. அதனை தொடர்ந்து அஸ்வினும் 29 ரன்களுக்கு வெளியேற ராஜஸ்தான் அணி 14.3 ஓவர்களில் தான் 100 ரன்களை கடந்தது.

ராஜஸ்தான் அணியில் அதன் பிறகு களமிறங்கிய துருவ் ஜுரேல், பராக்குடன் சேர்ந்து ரன்களை சேர்க்க ஆரம்பித்தார். இறுதியில் ஓவர்களில் அதிரடி காட்டிய ரியான் பராக் 44 பந்துகளில் 83* ரன்கள் எடுத்திருந்தார்.  இறுதியில், 20 ஓவருக்கு ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு  185 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியில் பந்து வீசிய 5 பவுலர்களும் தலா 1 விக்கெட்டை எடுத்தனர். அதன் படி 186 என்ற இலக்கை எடுப்பதற்கு டெல்லி அணி தற்போது பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது.

Published by
அகில் R

Recent Posts

“2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தருமபுரியில் போட்டி” – மாவட்ட தலைவர் சிவா!

தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…

16 mins ago

“அடுத்த 9 நாட்களில் மழைக்கு வாய்ப்பு இல்லை” வானிலை ஆய்வாளர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…

1 hour ago

“அரசியல் அராஜகம் ஒழிக, நீதி வெல்லட்டும்” – நடிகை கஸ்தூரிக்கு நவ.29 வரை நீதிமன்றக் காவல்!

சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…

2 hours ago

“வேறு வழி இல்லை!”டெல்லி அமைச்சர் திடீர் ராஜினாமா.! கெஜ்ரிவாலுக்கு பரபரப்பு கடிதம்.!

டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…

3 hours ago

30 நிமிடத்தில் டெல்லி டூ அமெரிக்கா செல்லலாம்.! எலான் மஸ்க் பலே திட்டம்.!

சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…

4 hours ago

குடை எடுத்துக்கோங்க… இன்று 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…

5 hours ago