RRvsDC : ரியான் பராக் ஆட்டத்தால் தப்பித்த ராஜஸ்தான் ..!! டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு ..!
RRvsDC : ஐபிஎல் தொடரின் 9-தாவது போட்டியாக ராஜஸ்தான், டெல்லி அணி இடையே நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன் மூலம் பேட்டிங்கை செய்ய களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு அதிர்ச்சிகள் காத்திருந்தது. ராஜஸ்தான் அணியில் அட்டகாசமான ஃபார்மில் இருக்கும் இளம் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.
அவரை தொடர்ந்து களமிறங்கிய அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனும் 15 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பிறகு களத்தில் இருந்த பட்லரும் பேட்டிங்கில் 11 ரன்களில் சரிக்கினார். டெல்லி அணியின் அபார பந்து வீச்சால் 7.2 ஓவர்களில் ராஜஸ்தான் அணி வெறும் 36-3 என்ற இக்கட்டான தருணத்தில் இருந்தனர். இதனால் ராஜஸ்தான் அணி டெல்லி அணியின் பந்து வீச்சில் மிகவும் திணறியது.
அதன் பின் அஸ்வினும், ரியான் பராகும் நிதானத்துடன் விளையாடி அணியின் ஸ்கோரை படி படியாக உயர்த்தினார்கள். அவர்கள் இருவரது பொறுமையான ஆட்டத்தால் ராஜஸ்தான் அணி இக்கட்டான தருணத்தில் இருந்து தப்பினாலும் டெல்லி அணியின் பந்து வீச்சுக்கு தடுமாறியே விளையாடியது. அதனை தொடர்ந்து அஸ்வினும் 29 ரன்களுக்கு வெளியேற ராஜஸ்தான் அணி 14.3 ஓவர்களில் தான் 100 ரன்களை கடந்தது.
ராஜஸ்தான் அணியில் அதன் பிறகு களமிறங்கிய துருவ் ஜுரேல், பராக்குடன் சேர்ந்து ரன்களை சேர்க்க ஆரம்பித்தார். இறுதியில் ஓவர்களில் அதிரடி காட்டிய ரியான் பராக் 44 பந்துகளில் 83* ரன்கள் எடுத்திருந்தார். இறுதியில், 20 ஓவருக்கு ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியில் பந்து வீசிய 5 பவுலர்களும் தலா 1 விக்கெட்டை எடுத்தனர். அதன் படி 186 என்ற இலக்கை எடுப்பதற்கு டெல்லி அணி தற்போது பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது.