பந்துகளை சிக்ஸருக்கு பறக்கவிடும் ரிஷப் பண்ட்..!

ரிஷப் பண்ட் பந்துகளை அணைத்து திசைகளிலும் சுழற்றி அடிக்கும் வீடியோவை டெல்லி அணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடைபெற மூன்று நாட்கள் உள்ள நிலையில், 8 அணியில் உள்ள கிரிக்கெட் வீரர்களும் கடின பயிற்சி செய்து வருகிறார்கள், மேலும் வருகின்ற சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு முதல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.
மேலும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டும் மோதவுள்ளது. மேலும் இந்த போட்டிக்காக அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துள்ளார்கள். இந்த நிலையில் இந்த வருடம் ஐபிஎல் கோப்பையை வெல்லும் நோக்கத்துடன் டெல்லி அணி கடினமாக பயிற்சி செய்து வருகின்றார்கள்.
இந்த நிலையில் டெல்லி அணியின் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் பயிற்சி செய்யும் வீடியோவை டெல்லி அணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது, அந்த வீடியோவில் ரிஷப் பண்ட் பந்துகளை அணைத்து திசைகளிலும் சுழற்றி அடிக்கிறார், அந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.
View this post on Instagram
Rishabh Pant FC, here’s a little something for you ???????????? #Dream11IPL #YehHaiNayiDilli