ஒரே நாளில் இரண்டு சாதனைகளை படைக்கவுள்ள ரிஷப் பண்ட்..!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பண்ட் இன்று இரண்டு சாதனைகளை படைக்கவுள்ளார்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பண்ட் இதுவரை 59 ஐபிஎல் போட்டிகள் விளையாடி 1907 அடித்துள்ளார். அதைபோல் 170 பவுண்டரிகளும் 99 சிக்ஸர்களும் விளாசியுள்ளார். இந்த சீசன் ஐபிஎல் தொடரில் மட்டும் 5 போட்டிகள் விளையாடி 171 ரன்கள் அடித்துள்ளார்.
இந்த நிலையில் இன்று டெல்லி அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஷார்ஜா மைதானத்தில் மோதவுள்ளது. இந்த போட்டியில் அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பண்ட் 1 சிக்ஸர்கள் அடித்தால் ஐபிஎல் போட்டிகளில் அவர் அடித்த சிக்ஸர்களின் எண்ணிக்கை 100 ஆகிவிடும்.
அதைபோல் இந்த போட்டியில் 93 ரன்கள் அடித்தால் ஐபிஎல் போட்டிகளில் அவர் அடித்த ரங்களின் எண்ணிக்கை 1,000 ஆகிவிடும், இந்நிலையில் இந்த இரண்டு சாதனைகளை இன்று படைப்பாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்..