இந்திய அணியின் இளம் வீரரும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர்-30 2022- ம் ஆண்டு டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் கார் விபத்திற்குள்ளனார். இந்த விபத்தில் பலத்த காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி சிகிச்சை பெற்று கொண்டு வந்தார். தற்போது, அவர் வருகின்ற ஐபிஎல் போட்டிகளில் விளையாட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
#IPL 2024 : ஐபிஎல் தொடங்கும் தேதியை அறிவித்தார் லீக் தலைவர் ..! எப்போது தெரியுமா ..?
கடந்த ஓராண்டாக அவர் இந்திய அணிக்காக எந்த ஒரு போட்டியிலும் விளையாடவில்லை. தற்போது, பண்ட் வருகிற ஐபிஎல் தொடரில் முழுவதுமாக ஈடுபடுவார் என கருதப்படுகிறது எனவும் வரவிருக்கும் ஐபிஎல் சீசனில் டெல்லி அணியை ரிஷப் பண்ட் கேப்டனாக வழி நடுத்துவார் என்றும் பிசிசிஐ மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் வட்டாரங்களில் பேச்சு நிலவுகிறது என்று கிரிக்பஸ் பத்திரிகையின் கூற்று படி தெரிய வந்துள்ளது.
மேலும், அவர் களத்தில் ஒரு பேட்ஸ்மானாக மட்டுமே இருப்பார் எனவும் டெல்லி அணிக்காக வேறொரு வீரர் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகிறது. இந்நிலையில், 15 மாதங்களுக்கு பிறகு ரிஷப் பண்ட் மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் களமிறங்க உள்ளதால் டி20 உலகக்கோப்பையிலும் இந்திய அணிக்காக விளையாடுவதற்கான ஆலோசனையை பிசிசிஐ கையில் எடுக்கலாம் என்று தெரிகிறது.
இதை பற்றி ஏற்கனவே இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பிசிசிஐக்கு, “ரிஷப் பண்ட் நன்றாக மீண்டு வருகிறார் அவரை நாம் வரவிருக்கும் டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியில் பரிந்துரைக்கலாம் “, என்று அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரிஷப் பந்த் தற்போது, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) உட்படுத்தபட்டு முன்னேற்றம் அடைந்து வருகிறார். சமீபத்தில், தனது X தளத்தில் அவர் NCA-வில் சிகிச்சை பெற்று வரும் வீடியோ ஒன்றை வெளியிட்டதோடு விரைவில் கிரிக்கெட் போட்டிக்கு திரும்புவதற்கான குறிப்பையும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…