நிச்சயம் ஏமாற்றம்தான்… தோல்வி குறித்து ரிஷப் பண்ட் கூறியது என்ன?
ஐபிஎல்2024: ராஜஸ்தான் அணிக்கு எதிரான தோல்வி என்பது நிச்சயம் ஏமாற்றம் தான் என டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் கூறியுள்ளார்.
ஐபிஎஸ் தொடரின் நேற்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதியது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, பேட்டிங் இறங்கிய ராஜஸ்தான் அணி ஆரம்பத்தில் தடுமாறினாலும் பின்னர் அதிரடியாக விளையாடி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்களை சேர்த்து.
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த சீசனில் ராஜஸ்தானுக்கு இது இரண்டாவது வெற்றியாகும். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ரியான் பராக் (84 ரன்கள்) இந்த போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இதன்பின் தோல்வி குறித்து டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் கூறியதாவது, இந்த தோல்வி என்பது நிச்சயம் ஏமாற்றம் தான். இதிலிருந்து நாம் செய்யக்கூடிய சிறந்த விஷயம் என்னவென்றால் கற்றுக்கொள்வதுதான். பந்து வீச்சாளர்கள் 15-16 ஓவர்கள் வரை நன்றாகச் செயல்பட்டனர். பேட்டர்கள் சில சமயங்களில் விரைவாக ரன்களை அடிப்பார்கள்.
அது இந்த போட்டியில் நடந்தது. மார்ஷ் மற்றும் வார்னர் ஒரு நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். ஆனால், போட்டியின் மிடில் ஓவரில் சில விக்கெட்டுகளை இழந்ததால், இறுதியில் அதிக ரன்கள் அடிக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனால் இறுதியில் முடிந்தவரை ரன்களை சேர்த்தோம் என கூறினார்.
மேலும் கூறியதாவது, நோர்ட்ஜே இறுதிக்கட்டத்தில் பந்து வீச வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். ஆனால், இந்த முடிவு சில சமயங்களில் நல்லதாகவும் அமையும், கேட்டதாகவும் அமையும். எனவே, வரும் போட்டிகளில் நாங்கள் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புகிறேன் எனவும் குறிப்பிட்டார்.