பயிற்சியாளரை சரமாரியாக தாக்கிய சாஹல்! இடையில் சிக்கிய ரிஷப் பண்ட்! ‘தர்ம அடி’ வைரல் வீடியோ உள்ளே!
- இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான சாஹல், ரிஷப் பண்ட் ஆகியோர் குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபட்டனர்.
- அப்போது எடுக்கப்பட்ட பயிற்சியாளரை வேடிக்கையாக தாக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர்களான சாஹல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் பயிற்சியாளரை வேடிக்கையாக தாக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. அதாவது கிரிக்கெட் வீரர்கள் அப்போது வேறு விளையாட்டுகளில் பயிற்சி எடுப்பது வழக்கம்.
அந்த வகையில் ரிஷப் பண்ட் குத்து சண்டை பயிற்சியில் ஈடுபட்டார். அவருக்கு ஒரு பயிற்சியாளர் பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்தார். அதேபோல அந்த பயிற்சியாளர் சாஹலுக்கும் பயிற்சி அளித்தார். அப்போது ரிஷப் பண்ட் ஓடிவந்து, பயிற்சியாளரின் கையை பிடித்து கொண்டார்.
உடனே, சாஹல் பயிற்சியாளரை வேடிக்கையாக தாக்கினார். அப்போது ரிஷப் பண்டையும் தாக்கினார். இடையில் சஞ்சு சாம்சன் இணைந்து கொண்டு பயிற்சியாளரை தாக்கினார். இந்த வீடியோவை ரிஷப் பண்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
During After Workout Vs Workout pic.twitter.com/OSaoxPu3YG
— Rishabh Pant (@RishabhPant17) January 4, 2020