கொரோனாவுக்கு பின் மீண்டும் அணியில் இணைந்த ரிஷப் பந்த்…!

Published by
Edison

ரிஷப் பந்த் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து மீண்டும் இந்திய அணியில் இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அங்கு நடைபெறும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.இதன் முதல் டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி தொடங்குகிறது.

கொரோனா பாதிப்பு:

இந்த போட்டிகள் தொடங்க சிறிது காலம் இருப்பதால்,வீரர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.இந்த சமயத்தில்,இங்கிலாந்துக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான யூரோ 2020 போட்டியின் போது லண்டனில் உள்ள வெம்ப்லி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியைக் காண இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் தனது நண்பர்களுடன் சென்றிருந்தார். அதுமட்டுமல்லாமல்,மாஸ்க் அணியாமல் ரசிகர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.மேலும்,ரசிகர்களுக்கு செல்பி எடுக்கவும் அனுமதி கொடுத்துள்ளார் என்று சர்ச்சை எழுந்தது.

இதனையடுத்து,ஜூலை 8 ஆம் தேதி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் ரிஷப் பந்த்க்கு கொரோனா தொற்று உறுதியானது.இதனால்,ஒரு ஹோட்டலில் அவர் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார்.

பயிற்சி ஆட்டம்:

இதற்கிடையில்,டெஸ்ட் போட்டிகளுக்கு முன்னதாக நடைபெறும் மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தில் கலந்து கொள்ள இந்திய அணி டர்ஹாம் நகருக்குச் சென்றுள்ளது.அதன் முதல் போட்டியானது இன்று நடைபெற்று வருகிறது.இந்த போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா உள்ளார்.

ஆனால்,மீண்டும் கொரோனா பாசிடிவ் என வந்த ஜூலை 14 ம் தேதி எடுத்த ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளைத் தொடர்ந்து ரிஷப் பந்த் மற்றும் அணியின் பயிற்சி உதவியாளரும்,பந்து வீச்சாளருமான தயானந்த் கரானி ஆகியோர்  டர்ஹாமிற்கு செல்லவில்லை.

மேலும்,இரண்டு நெகடிவ் ஆர்டி-பிசிஆர் சோதனைகளைத் திருப்பியளித்த பின்னர் அவர் டர்ஹாமில் உள்ள இந்திய அணியில் சேர முடியும் என்று  பிசிசிஐ தெரிவித்திருந்தது.

கொரோனா நெகடிவ்:

இதனையடுத்து,மருத்துவக் கண்காணிப்பில் இருந்த ரிஷப் பந்த்க்கு மீண்டும் சோதனை செய்ததில் கொரோனா நெகடிவ் என வந்துள்ளதாகவும், இதனால் ,டர்ஹாமிற்கு சென்றுள்ள இந்திய அணியுடன் மீண்டும் இணைந்து 28 ஆம் தேதி நடைபெறவுள்ள இரண்டாவது பயிற்சிப் போட்டியில் கலந்து கொள்வார் என்றும் தகவல் வெளியாகியது.

அணிக்கு திரும்புதல்:

இந்நிலையில்,ரிஷப் பந்த் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வியாழக்கிழமை நடைபெறவிருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க,இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.

இதனை உறுதி செய்யும் வகையில் பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “ஹலோ ரிஷப் பந்த்,நீங்கள் இந்திய அணிக்கு திரும்பப் பெறுவது மிகவும் நல்லது” என்று ரிஷப் பந்தின் புகைப்படத்துடன் ட்வீட் செய்துள்ளது.

Published by
Edison

Recent Posts

விடுதலை 2 இப்படி தான் இருந்துச்சு! தனுஷ் சொன்ன விமர்சனம்!

சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…

23 minutes ago

ரூ.6 கோடி ஒதுக்கீடு! அரசு பள்ளி மாணவர்களின் உயர் கல்வி செலவை அரசே ஏற்கும் – அன்பில் மகேஸ்

சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…

43 minutes ago

பொங்கல் நாளில் நெட் தேர்வு : “வேறு தேதிகளில் நடத்துங்கள்”- அமைச்சர் கோவி செழியன் கடிதம்!

சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…

1 hour ago

ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்புங்கள்! இந்தியாவுக்கு வங்கதேச அரசு கோரிக்கை!

டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…

2 hours ago

ரூ.3,657 கோடியில் ஓட்டுநர் இல்லாத ரயில்கள்! BEML நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்ட மெட்ரோ!

சென்னை : மெட்ரோ நிர்வாகம் தற்போது, இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோஇரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை ரூ.3,657.53 கோடி…

2 hours ago

கிறிஸ்மஸ் தாத்தா உண்மையிலேயே யார் தெரியுமா.? கிறிஸ்மஸ் ட்ரீ வைக்க இதான் காரணமா..?

கிறிஸ்மஸ் தாத்தா உருவான வரலாறு, கிறிஸ்மஸ்  ட்ரீ  வைக்க காரணம் மற்றும் வீட்டில் ஸ்டார்  வைப்பது எதற்காக என்றும் இந்த…

2 hours ago