10 நிமிடத்த்தில் வரலாற்றை மாற்றினார் ‘ரிஷப் பண்ட்’! ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது லக்னோ!
அதிரடி மற்றும் விக்கெட் கீப்பர் வீரரான ரிஷப் பண்டை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி கடுமையான போட்டியிட்டு ஏலத்தில் எடுத்தனர்.
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய வீரர்களுக்கான ஏலம் என்பது தற்போது நடைபெற்று வருகிறது.
அதன்படி, முன்னதாக ஷ்ரேயஸ் ஐயருக்கு கடுமையான போட்டி நடைபெற்றது, அதில் அவரை ரூ.27.75 கோடிக்கு பஞ்சாப் அணி எடுத்தது. அது ஐபிஎல் வரலாறாக பேசப்பட்டு வந்த அடுத்த 10 நிமிடத்தில் ரிஷப் பண்ட அதனை மாற்றியிருக்கிறார்.
அதன்படி, ரிஷப் பண்ட் ஏலத்தில் வந்த போது, பல அணிகளுக்கு இடையே கடுமையான போட்டியானது நடைபெற்றது. குறிப்பாக பஞ்சாப், டெல்லி, ஹைதராபாத் மற்றும் லக்னோ அணி போட்டியிட்டது. கடுமையான போட்டி ரிஷப் பண்டுக்கு நடைபெற்றது என்றே கூறலாம்.
இறுதியில், ரூ.20.75 கோடிக்கு இருந்த நிலையில், லக்னோ அணி தங்களது பட்ஜெட்டை ரூ.27 கோடிக்கு உயரத்தியதும், உடன் போட்டியிட்ட டெல்லி அணி போட்டியிலிருந்து விலகியது. அதனால், இறுதியில் ரூ.27 கோடிக்கு ரிஷப் பண்டை லக்னோ அணி எடுத்துள்ளது.
இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையைப் படைத்தார் ரிஷப் பண்ட். மேலும், லக்னோ அணியின் கேப்டன் இடம் காலி என்பதால், லக்னோ அணியின் கேப்டனாகவும் பண்ட் செயல்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.