IPL 2024 : விக்கெட் கீப்பர் பேட்ஸ்மானாக மீண்டும் ரிஷப் பண்ட் ! பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு !
IPL 2024 : இந்திய அணியின் இளம் வீரரும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர்-30 2022- ம் ஆண்டு டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் கார் விபத்திற்குள்ளனார். இந்த விபத்தில் பலத்த காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி சிகிச்சை பெற்று கொண்டு வந்தார். முன்னர், அவர் வருகின்ற ஐபிஎல் போட்டிகளில் விளையாட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தது. தற்போது, அந்த தகவலை பிசிசிஐ உறுதி செய்துள்ளது.
Read More :- IPL 2024 : முதல் 2 போட்டியில் SKY இல்லை ..? சென்னை அணியை தொடர்ந்து மும்பை அணிக்கு அடுத்த இடி !
கடந்த ஓராண்டாக அவர் இந்திய அணிக்காக எந்த ஒரு போட்டியிலும் விளையாடமல் இருந்த நிலையில். தற்போது, பண்ட் வருகிற ஐபிஎல் தொடரில் முழுவதுமாக ஈடுபட உள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை ரிஷப் பண்ட் கேப்டனாகவும் வழி நடுத்துவார் என்றும் தெரிகிறது.
ரிஷப் பண்ட் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) மறுவாழ்வுக்காக உட்படுத்தபட்டு முன்னேற்றம் அடைந்து வந்தார். அவரது உடற்தகுதியும் தற்போது விளையாடுவதற்கு ஏதுவாக மாறியுள்ளது. இதை மேலும் உறுதி செய்யும் விதமாக பிசிசிஐ தற்போது, “ஒரு நீண்ட மாதங்களுக்கு முன்பு, அதாவது ரிஷப் பண்ட் டிசம்பர் 30 2022 -ல் விபத்துக்குள்ளானார்.
Read More :- ஆண்டுக்கு இரு முறை ஐபிஎல் போட்டிகள்.! வெளியான தகவலால் ரசிகர்கள் குஷி
தற்போது மீண்டும், கிட்டத்தட்ட 14-மாதங்களுக்குப் பிறகு மீண்டும் 2-வது வாழ்வாக கிரிக்கெட்டிற்கு திரும்ப வந்துள்ளார் ரிஷப் பண்ட், இவர் மீண்டும் TATA IPL தொடரில் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் விளையாட தகுதியாக இருக்கிறார்”, என்று பிசிசிஐ அவர்களது X தளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த அதிகாரப்பூர்வ அப்டேட் மூலம் ரிஷப் பண்ட் ரசிகர்கள், பண்டின் விளையாட்டை காண ஆர்வத்துடன் இருந்து வருகின்றனர்.
???? ???????????????????????? ???????? ???????????????????????????? ????????????????:
After undergoing an extensive 14-month rehab and recovery process, following a life-threatening road mishap on December 30th, 2022, @RishabhPant17 has now been declared fit as a wicket-keeper batter for the upcoming #TATA @IPL 2024…
— BCCI (@BCCI) March 12, 2024